இந்த உலகத்தில் தோல்வி என்பதெல்லாம் தோல்வியே அல்ல கண்மணி!
பி ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானவுடன் நண்பர்கள் பலரின் வேதனைக் குரல்கள் நாலா பக்கமும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் போதுமான மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதும் அது போதாது என்பதே அவர்கள் முன் வைக்கும் வாதம். இந்த சமயத்தில் பெய்கிற மழை சில ஞாபகங்களை அழைத்துக்கொண்டுவந்து காலையில் என் வீட்டின் முன்னால் நிறுத்தியது. பிளஸ் டூ தேர்வில் அதிகமான பாடங்களில் நான் தோல்வியடைந்திருந்தேன் (ஏறக்குறைய தமிழ், ஆங்கிலம் நீங்கலாக). முடிவு தெரிந்தபோது அதிகம் சந்தோஷமாக இருந்தேன். காரணம், அந்த தேர்வில் நான் மனப்பாடம் செய்யாமல் தேர்வு எழுத வேண்டும் என்று எடுத்த முடிவுக்கு கிடைத்த பரிசுதான். ஜே.கே.வும், ஒஷோவும் என்னை அப்போது முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தார்கள். வாழ்க்கையை கொண்டாட்டமாக வைத்திருந்த நாட்கள் அவை. தோல்வி என்று இந்த சமூகம் குறிப்பிடுகிற விஷயம், எனக்கு சந்தோஷத்தின் கடலாக தோன்றியது. தோல்வியை கொண்டாடும் விதமாக என்னை சுற்றிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்பு வழங்கி, தேர்வில் நான் பெயிலானதை தெரிவித்தேன். ஒருவரும் நம்பவில்லை! காரணம், பத்தாம் வகுப்பில் எங்க ஊர் அரசு ம