மக்களின் அங்கீகாரம் கிடைக்க...

மிழ் சினிமாவிற்கு மகுடம் சூட்டிய பலர் கோலிவுட்டில் உண்டு. அவர்களில்குறிப்பிடத் தகுந்தவராக கலைஞர் கருணாநிதியை சொல்லலாம். தமிழகமுதல்வர் என்பதிலிருந்து நாம் சற்று விலகி, அவரை தமிழ் சினிமாவின் சிறந்தவசனகர்த்தா என்கிற முறையில் அணுகினால் தமிழ் சினிமாவின் போக்கைமாற்றியமைத்ததில் அவருக்கு மிகப்பெரும் பங்கு இருப்பது தெரியும்.
இதுவரை எழுபத்தைந்து திரைப்படங்களுக்கு (ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, மருத நாட்டு இளவரசி, மணமகன், தேவகி, பராசக்தி, பணம், திரும்பிப்பார், நாம், மனோகரா, அம்மையப்பன், மலைக்கள்ளன், ரங்கூன் ராதா, ராஜா ராணி, புதையல், புதுமைப்பித்தன், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், குறவஞ்சி, தாயில்லாப் பிள்ளை, காஞ்சித்தலைவன், பூம்புகார், பூமாலை, மணிமகுடம், மறக்க முடியுமா?, அவன் பித்தனா?, பூக்காரி, நீதிக்கு தண்டனை, பாலைவன ரோஜாக்கள், பாசப் பறவைகள், பாடாத தேனீக்கள், நியாயத் தராசு, பாசக்கிளிகள், கண்ணம்மா, உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் உட்பட) திரைக்கதை - வசனம் எழுதியிருக்கிறார். அவருடைய "மாஸ்டர் பீஸô' இன்றும்பலரால் புகழப்படுவது, "பராசக்தி' திரைப்படத்திற்காக அவர் எழுதி நீதிமன்றக்காட்சியில் சிவாஜி பேசும் வசனங்கள்தான்!
ஆரம்பத்தல் தமிழ் சினிமாவில் "மணிபிரவாள' நடையில்தான் வசனங்கள்பேசப்பட்டு வந்தன. ஆனால், ""தொடாதே வஞ்சகி... நீ தொட்டால் விஷம் கூடசெத்துவிடும்...'' ""உடைந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்'' போன்றஉயிர்த் துடிப்புமிக்க வசனங்கள், தழிழ் சினிமாவில் இயல்புத் தமிழ் நடையைக்கொண்டு வந்தன. இவை போன்ற இன்பத் துள்ளல் வசனங்களுக்கு முன்னோடி
யாய் இருந்தவர் இளங்கோவன். பிறகந்த பாணி பிரபலமானது. பிரபலபாடலாசிரியர் கண்ணதாசன், இளங்கோவனின் வசனப் புலமையைப் பார்த்துவியந்ததுண்டு. இளங்கோவனின் ஒரு குறிப்பிட்ட வசனம் குறித்துக்கேட்டிருக்கிறார் கண்ணதாசன். அதற்கு இளங்கோவன், ""அதுவா...? அதை நான்எழுதவில்லை. ஏற்கனவே ஷேக்ஸ்பியர் எழுதிய கருத்தை உள்வாங்கி, அதைவசனமாக்கினேன்; அவ்வளவுதான்...'' என்றாராம் அடக்கத்தோடு. கண்ணதாசன்அந்த வசனத்தை அப்படியே பாடலாக மாற்றி எழுதியிருக்கிறார். அந்தப்பாடல்தான், "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே' என்ற "எவர் கிரீன் ஹிட்' பாடலாகும். இளங்கோவனின் தொடர்ச்சியாக வந்தவர்தான் கலைஞர். ஆனால், துரதிருஷ்டவசமாக இளங்கோவன், சுரதா, கண்ணதாசன் போன்ற வசன வாள்வீச்சுக்காரர்களின் புகழ் கோடம்பாக்கத்துக்காரர்களால் வசதியாகமறக்கடிக்கப்பட்டுவிட்டது; கலைஞர் பெயர் நிலைத்துவிட்டது. இதற்கு அரசியல்அரங்கில் கலைஞர் கண்டு கொண்டிருக்கும் ஏறுமுகம், ஒரு முக்கிய காரணம்.
இந்த நிலையில் தன்னுடைய இயல்பான வசனங்கள் மூலம் பரவலானகவனத்தை ஈர்த்து, தரமான தமிழ்ப் படங்களை தமிழுக்கு தந்து ஒரு புதியடிரெண்ட் செட்டராக உலா வரத் தொடங்கினார் இயக்குநர் ஸ்ரீதர். "காதலிக்கநேரமில்லை' உள்ளிட்ட அவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் வசனத்தில்மட்டுமின்றி, மாறுபட்ட திரைக்கதையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இச்சூழலில்தான் நாடகத்தில் புகழ்பெற்றிருந்த பாலசந்தரும் சினிமாவுக்கு வந்துதன்னுடைய தனித்துவ முத்திரையைப் பதிக்கத் தொடங்கினார். பெண்களைசுற்றி நிகழும் பல்வேறு யதார்த்த பிரச்சினைகளை மையமாகக் கொண்டு பலதிரைப்படங்களை எடுத்தார். அவருடைய பாத்திரப்படைப்பும், வசனங்களும், திரைக்கதை உத்தியும் பெரிதும் புகழ்ந்து பேசப்பட்டன. ஆனால், அவருடையபெரும்பாலான படங்கள் மெலோ - டிராமா வகையிலேயே இருந்ததால்பெரும்பாலான காட்சிகள் ஒரு நான்கு சுவர்களுக்கு மத்தியிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தன. இச்சூழலில்தான் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய மாற்றத்தைஏற்படுத்தினார் இயக்குநர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களிலும், செட் வீடுகளிலும்அடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை, தமிழ்நாட்டு கிராமங்களுக்கு இட்டுச்சென்றார். "பதினாறு வயதினிலே' என்னும் திரைப்படம் வெளியானபோது அதன்அதிர்வுகள் பலரை புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டின. தமிழ் சினிமாவைகிராமங்களுக்குக் கொண்டு சென்றவர், அல்லி நகரத்துக்காரரான பாரதிராஜாஎன்றால் அது மிகையில்லை.
கிராமத்தின் தெருக்கள், வீதிகள், மாட்டு வண்டிகள், வாய்க்கால், வரப்புகள், தோட்டம், பூவரசம் பூ உள்ளிட்ட கிராமத்துக்கே உரிய அம்சங்களையும், அவர்களின் கலாச்சார, பழக்க வழக்கங்களையும் தன்னுடைய கதையில், தன்னுடைய பாணியில் புகுத்தி தமிழ் சினிமாவின் போக்கையேமாற்றியமைத்தார் பாரதிராஜா.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற "தூங்கா நகரம்' படம் உட்பட பல படங்கள்பாரதிராஜாவின் பாதிப்பில் உருவான திரைப்படங்களே! சுமார் முப்பதுவருடங்களுக்கும் மேலாக பாரதிராஜாவின் பாதிப்பு தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. பாரதிராஜா மூலமாக கலைமணி, செல்வராஜ், மணிவண்ணன், பாக்யராஜ் போன்ற பல திறமை மன்னர்கள் தமிழ் சினிமாவிற்குகிடைத்தார்கள். கிராமத்துக்கே உரிய பழமொழிகள், எள்ளல்கள், நக்கல், நையாண்டி யாவும் பாரதிராஜாவின் படங்களில் யதார்த்தம் மாறாமல்வெளிப்பட்டன. பாரதிராஜாவின் வருகையை தமிழ் சினிமாவின் பொற்காலம்என்று திரை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழ் சினிமாவை பாரதிராஜாவிடமிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர்மணிரத்னம். "பகல் நிலவு' படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான மணிரத்னம், தன்னுடைய "மெü ராகம்', "நாயகன்', "அக்னி நட்சத்திரம்',"தளபதி' போன்றபடங்களின் காட்சிகளில் அதிகமாக வசனங்கள் இடம் பெறுவதைக் குறைத்து, சினிமாவை காட்சியியல் ஊடகமாக மாற்றினார். இது பெரும் புரட்சி! சினிமாவின்சரியான துவக்கம் மணிரத்னத்திடமிருந்ததுதான் துவங்கியது என்பது பெருமளவுஉண்மை. அதற்குக் காரணம், தமிழ் சினிமா மணிரத்னத்திற்கு முன்புபெரும்பாலும் வசனங்களினால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்துதான்! மணிரத்னத்தோடு எழுத்தாளர் பாலகுமாரன் இணைந்து வசனம் எழுதிய "நாயகன்' படம் பெருவாரியான வெற்றியைப் பெற்றதோடு வசனங்கள் எந்தெந்தஇடங்களில் சரியாக வெளிப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியது. ""நாலுபேருக்கு நல்லதுன்னா... எதுவுமே தப்பில்லை!'', ""தாத்தா... நீங்க நல்லவரா...? கெட்டவரா...?'', ""தெரியலப்பா...'' போன்ற வசனங்கள் இடம் பெற்ற "நாயகன்' படக்காட்சிகள் இன்றும் கோலிவுட்டில் சிலாகிக்கப்படும் வசனங்களில் ஒன்றாகஇருக்கிறது.
மணிரத்னத்தோடு இணைந்து எழுத்தாளர் சுஜாதா "அலைபாயுதே' படத்திற்காகஎழுதிய ""நீ அழகாயிருக்கேன்னு நினைக்கல... நான் உன் லவ் பண்ணல... உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படல... ஆனா... இதெல்லாம்நடந்துடுமோன்னு பயமாயிருக்கு...'' என்ற வசனம் தமிழக இளைஞர்பட்டாளத்தின் அரட்டைக் கச்சேரிகளில் முதலிடத்தைப் பிடித்தது. மணிரத்னத்தை தொடர்ந்து வந்த சேரன், பாலா, அமீர், மிஷ்கின், சுசீந்திரன், பாண்டிராஜ் என ஒரு பெரிய இளைஞர் பட்டாளம் இன்று தமிழ் சினிமாவின்வசனங்களை மாறுபட்ட தளத்திற்கு கொண்டுபோய் சேர்த்து இருக்கிறது. இத்தகைய சூழலிலும் இன்னும் தொடர்ந்து பழைய பாணியிலேயே வசனங்களைஎழுதிக் கொண்டிருக்கிறார் கலைஞர்!
சமீப ஆண்டுகளில் அவர் கைவண்ணத்தில் வெளிவந்த, "பாசக்கிளிகள்', "கண்ணம்மா', "உளியின் ஓசை', "பெண் சிங்கம்', "இளைஞன்' போன்ற படங்கள்பெருவாரியான ரசிகர்களிடத்தில் போய்ச் சேரவில்லை. இத்தகைய படங்களின்திரைக்கதையும் சரி, பாத்திரப் படைப்பு, வசனங்கள், காட்சியமைப்புகள் எனஅனைத்தும் "பிரிமிடிவ்' பாணியிலேயே இருந்ததால் அப்படங்கள் ரசிகர்களிடம்எடுபடாமலேயே போய்விட்டது. சமீபத்தில் வெளியான "இளைஞன்' படம், மற்றபடங்களை ஒப்பிடும்போது "இது பரவாயில்லை' என்கிற ரகத்தோடு நின்றுகொண்டதே தவிர, ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தகுந்த வரவேற்பைப்பெறவில்லை. மோனையில் வசனங்களை படைப்பதில் வல்லவரானகலைஞரால் தற்கால இளைஞர்களை தன் வசம் இழுக்கும் ஒரு திரைக்கதைவசனகர்த்தாவாக இடம் பெயர முடியவில்லை. இதற்குக் காரணம், தமிழ்சினிமாவில் மாறி வந்த சூழலை அவர் கவனிக்கத் தவறியது என்று கூறமுடியாது. ஆனால் "தன்னிலையில் மாறாமை' என்பது அவருக்கே உரியகலையுலகக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கக் கூடும். மாறாக, இன்றுகலைஞரின் வசனத்தில் வெளியாகும் படங்களைப் பற்றிய ஒரு சராசரி ரசிகனின்மதிப்பு என்பது "சுமாராகவே' இருக்கிறது என்பதே உண்மை.
கலைஞரின் கதை வசனத்தில் உருவாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில்வரவேற்பைப் பெறுகிறதோ இல்லையோ நிச்சயம் அந்தப் படங்கள் பலவிருதுகளைப் பெறுகின்றன. இதை "கலைஞரின் வசனம் இன்னும் தரம்குறையவில்லை' என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் ""கலைஞரின்அந்தக் கால வசனங்களுக்கு விருது கிடைக்கவில்லை. ஆனால் மக்களின்அங்கீகாரம் கிடைத்தது. கலைஞரின் இந்தக் கால வசனங்களுக்கு விருதுகிடைக்கிறது. ஆனால் மக்களின் அங்கீகாரம் கிடைக்கவில்லை'' என்கிறார்திரையுலக விமர்சகர் ஒருவர். நிஜம்தானே!

Comments

Popular Posts