அழகன் பக்கம்

ப்போதும் அந்த ஞாபகங்கள் மனதில் அழியாமல்தான் இருக்கின்றன. வாழ்வின் உன்னத தருணங்கள் மனதைவிட்டு அகலுவதில்லை போலும்! மழலைப் பருவத்தில் பெரும்பாலான நடு இரவுகளில் அம்மா தூக்கத்திலிருந்து பெயர்த்து எடுத்துக்கொண்டுபோய் நாடக அரங்கின் முதல் வரிசையில் இருத்தி வைத்திருப்பாள். பாதி தூக்கம் கண்ணில் நிற்க, ஃபுளொரிசெண்ட் பல்புகளின் வெளிச்சம் கண்களைக் கூச, அப்பா பெண் வேடமிட்டு யாருடனோ வாக்குவாதம் செய்து கொண்டிருப்பார். அதைக் தெருக்கூத்தா? நாடகமா? எதுவென்று அரியாத பருவமாதலால் சப்தமும், வெளிச்சமும், சிகை அலங்காரங்களும், இயல்பான பேச்சிலிருந்து மாறுபட்ட வசன உச்சரிப்பும் மட்டுமே என் மனதில் தங்கிப் போயிருந்தன. (இடையில் சில காலங்கள் பாட்டியின் அரவணைப்பில் இருந்ததால் அப்பாவிற்கும், எனக்குமான உறவில் பெரிய இடைவெளி விழுந்திருந்தது) எல்லோரும் விடுமுறை நாட்களைக் கழிக்க பாட்டியின் வீட்டிற்குப் போவார்கள் என்றால், நான் தலைகீழாக விடுமுறையின்போது மட்டுமே என் அப்பா வீட்டிற்குப் போவேன் (என் வாழ்க்கையின் பெருத்த முரண்பாடே இதுதான்!) கட்டற்ற சுதந்திரத்தை என் பாட்டி எனக்கு வழங்கியிருந்தார்கள் என்பதை என் அப்பாவினிடத்தில் இருக்கும்போதுதான் நான் அறிய நேர்ந்தது. மிகையல்ல, நீங்கள் நெப்போலியனின் சித்திரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தால் அது அப்பாவாகத்தான் இருக்கும். அம்மா, அவரை அடிக்கடி "முரட்டு ஆசாமி' என்பாள். அவர் முரட்டு ஆசாமியா? கம்யூனிஸவாதியா? என்பதெல்லாம் சம காலத்தில், அதுவும் அவர் என்னைவிட்டு விலகிய சில காலங்களில்தான் உணர நேர்ந்தது. சரி விஷயத்திற்கு வருகிறேன். பேச்சில், எழுத்தில், உரையாடலில் எப்படியோ அப்பாவின் வார்த்தைகளும், செய்கைகளும் வந்துவிடுகின்றன. நீ ஏன் உன் அப்பாவைப் போலிருக்கிறாய்? என்று யாரும் என்னை கேட்டதுமில்லை. நான் சொன்னதுமில்லை. ஆனால், ""அப்பாவை உனக்குப் அதிகம் பிடிக்கும்? என்று நினைக்கிறேன்''என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் (உண்மையில் எனக்கு அப்பாவைவிட, ஷாரதா பாட்டியைத்தான் அதிகம் பிடிக்கும் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்) திரைக்கதையாசிரியர் லோகிததாûஸப் பற்றி வாசிக்கும்போது எங்கள் இருவருக்குமிடையே ஓர் ஒற்றுமை நிழலாடிக் கொண்டிருப்பதாக நெருங்கிய தோழி ஒருத்தி கூறியது மட்டுமே என் நினைவில் நிற்கிறது. எதற்காக இப்படி சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறாய்? என்கிறீர்களா? என் பிரச்சினையே அதுதான்!
தமிழின் முக்கிய ஆளுமைகளை தனது டிவிடி கேமிராவுக்குள் பாதுகாத்து வைத்திருக்கும் ஆவணப்பட இயக்குநரும், எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டி.வி அகடமியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அருண்மொழியோடு சுற்றிக் கொண்டிருந்த வெயிற்கால மாலை வேளையில் கோடம்பாக்கத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டைமாடியில் நிகழவிருக்கும் நாடகம் ஒன்றிற்கு நம்மை அழைத்துப் போயிருந்தார். உடலும், மனமும் மிகவும் சோர்ந்து போயிருந்த தருணம் அது. அங்கே, எழுத்தாளர் பாமாவின் "சாமியாட்டம்' சிறுகதையை தனி நபர் நாடகமாக நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்த அந்த மாநிறப் பெண்ணின், வசன உச்சரிப்புகள்தான் முதலில் நம் கவனத்தை ஈர்த்தன. பிறகு மெல்ல, மெல்ல அவருடைய உடல்மொழியும், அசைவுகளும், நாடகத்திற்காக அவர் உருவாக்கியிருந்த சிறிய வகையிலான அரங்க வடிவமைப்பும், அதிலிருந்த நேர்த்தியும் மெல்ல மெல்ல நம்மைக் கவர ஆரம்பித்தன. மொட்டை மாடியில் பல தரப்பட்ட ரசிக மனோபாவம் கொண்டிருந்தவர்களின் மத்தியில் நான் தனித்து உட்கார்ந்திருந்தேன். சூழல் மிக வேகமாகப் மாறிக் கொண்டேயிருந்தது. இருட்டத் தொடங்கிய வேளையில் அருண்மொழியும், நானும் அவரவர் திசை நோக்கி பிரிய நெரிடுகையில்தான் அருண்மொழியிடம், ""மிகச் சிறப்பாக நடித்தாரே (இங்கு நடித்தார் என்பதைவிட பாத்திரத்தை உள்வாங்கி வெளிப்படுத்தினார் என்றால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்) அந்த பெண்ணுடைய பெயர் என்ன?'' என்று கேட்டேன். அவர் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே, ""அவங்க பேர் விநோதினி. நாடகம் ஆரம்பிக்கிறது முன்னாடி ஒரு மேடத்தை அறிமுகப்படுத்தினேனே அவங்களோடு பொண்ணுதான்! என்றார். (எத்திராஜ் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியையான சந்திரலேகா மேடத்தைதான் அவர் எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். இவரிடம் தமிழ்க் கற்ற பல மாணவர்கள் குறிப்பாக கவிஞர். கனிமொழி எம்.பி. உட்பட இன்று பல துறைகளில் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்)அதெல்லாம் சரி! நீ சொல்ல வந்ததை முதலில் சொல்லு என்பது எனக்கு கேட்கிறது. விஷயம் இவ்வளவுதான்!
விநோதினியின் நாடக நிகழ்வு இரண்டொரு நாட்களாக மனதில் மையம் கொண்டிருந்தது. அது மனதை சுற்றிக் கொண்டேயிருந்ததற்குக் காரணம், நாடகம் தனது உள்ளுறை (நன்க்ஷ-ற்ங்ஷ்ற்)யாக குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் குடும்ப வன்முறையை வைத்துக் கொண்டிருந்ததுதான். "சாமியாட்டம்' சிறுகதையில் வரும் மூன்று முக்கிய பாத்திரங்களையும் தானே ஏற்று நடித்திருந்தார் விநோதினி. ஒரு பாத்திரத்திலிருந்து, மிக வேகமாக அடுத்த பாத்திரத்திற்கும், அதிலிருந்து மிக இலகுவாக மற்றொரு பாத்திரத்திற்கும் அவர் தாவியது பெரும் பாதிப்பை என் மனதில் உருவாக்கி விட்டிருந்தது. குறிப்பாக கதையில் அந்த கணவன் குடித்துவிட்டு வந்து, தன்னுடைய மனைவியின் மேல் மூத்திரத்தைப் பெய்யும்போது அவள் கதறும் காட்சி, என் நினைவில் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. அதில் விநோதியின் வெளிப்பாட்டுத் தன்மை கதையின் உயிரோட்டத்தை மிக நேர்த்தியாகவும், வலிமையாகவும் வெளிப்படுத்தியிருந்தது. தொடர்ந்து பெண் மீது ஆண் நிகழ்த்தும் வன்முறையை, அதிகாரத்தை தனது உடல்மொழியாலும், வசனங்களாலும் தோலிரித்துக் காட்டியிருந்தார் அவர்! (அப்பா ஒருமுறை ""மகனே! சமூகத்தைப் புரிந்துகொள்ள நீ முதலில் தெருவில் இறங்கி களப்பணியாற்ற வேண்டும். அப்போதுதான் மனிதர்களின் பிரச்சினைகளையும், அவர்களின் பல தரப்பட்ட உணர்வுகளையும், நீ புரிந்துகொள்ள முடியும்'' என்று கூறியது ஏனோ, இப்போது என் ஞாபகத்திற்கு வந்து போகிறது) தொடர்ந்து மனதிற்குள் சுழன்று கொண்டிருந்த அந் நாடகத்தின் தாக்கம் ஒரு பிரபல பத்திரிகையில் எழுதுமளவிற்கு என்னைத் தூண்டியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மனதை அழுத்திக் கொண்டிருந்த அந்த வலியை எழுத்தில் கொண்டுவந்து கொட்டியும் அழுத்தம் குறையவே இல்லை, பதிலாக அதிகரிக்கவே செய்திருந்தது. தொடர்ந்து விநோதினியின் நாடக செயல்பாடுகள் குறித்து நண்பர் அருண்மொழியை நச்சரித்துக் கொண்டே இருந்தேன்.
சென்னை வாழ் மக்களை கத்திரி வெயில் காய்ச்சி, எடுத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. அப்போது யாரும் எதிர்பாராமல் ஒரு அரிய நிகழ்வு வானிலையில் நடந்தேறியது. வான தேவதை மெல்ல தன் கண்களைத் திறந்து பூமியில் தவித்துக் கொண்டிருந்த எம் மக்களை கொஞ்சம் அடைமழையில் நனைத்தி எடுத்திக் கொண்டிருந்தாள். தெருவெங்கும் உற்சாகமாய், யாவர் முகத்திலும் சந்தோஷம் பூத்து குலுங்க அந்த அடைமழையில் நானும் குடையில்லாமல் நனைந்து கொண்டிருந்தேன். அப்போது அருண்மொழியிடமிருந்து எனது செல்பேசிக்கு ""இன்று மாலை நான் விநோதினியை சந்திக்கப் போகிறேன்'' என்று ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதை படித்துக் கொண்டிருக்கையில் பெருமின்னல் ஒன்று பூமியைத் தொட்டுவிட்டது போனது! நான் வியப்பில் மேகக்கூட்டங்களையேப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.
(தொடரும்)

Comments

Popular Posts