"நந்தலாலா' பட அனுபவங்கள்

மிஷ்கினின் உதவியாளர் என்கிற முறையிலும், இப்படத்தின் மூலமாகத்தான் நான் தமிழ் சினிமாவின் பல இடர்பாடுகளை நேரடியாக கண்டேன் என்கிற வகையிலும் எனது நண்பர்களுக்கு "நந்தலாலா' குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆவல் படுகிறேன் (அட ஒரு விளம்பரம்!) அண்ணன் கடற்கரய் குறிப்பிட்டுள்ளதைப்போல, "நந்தலாலா' தமிழ் சமூகம் பார்த்து களிக்க வேண்டிய மகோன்னத படைப்புதான். தமிழ் சினிமாவின் பரிமாணங்களின் அடுத்த துவக்கமாக, மாற்று முயற்சியாக, காலம் காலமாக "காதலை' கட்டிக்கொண்டு அழும் தமிழ் சினிமாவிற்கு விடுதலையளிக்கும் விதமாகத்தான் "நந்தலாலா'வை உருவாக்கினோம் (சினிமா என்பது கூட்டுமுயற்சி என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்) ஒன்றரை வருடங்கள் தொடர்ச்சியாக கதை விவாதம், நான்கு முறை திருத்தி எழுதப்பட்ட திரைக்கதை வடிவம் ( மிஷ்கின் திரைக்கதை எழுத, ஏறக்குறைய 1200க்கும் மேற்பட்ட பக்கங்களை நான் காப்பிரைட் செய்தேன். அந்த வகையில் மிஷ்கினின் திரைக்கதையை படிக்கும் முதல் வாசகனானேன். இதை அவரே பலமுறை ஒப்புக்கொண்டுள்ளார் ) கதாப்பாத்திரங்களைத் தேடி வீதி வீதியாக அலைந்தது, ஏறக்குறைய தமிழ் சினிமாவில் இருந்த சில குறிப்பிட்ட பெரும் நாயகர்களைத் தவிர்த்து அனைவரிடம் கதை சொல்லி, ஏமாற்றமடைந்தது என "நந்தலாலா' எங்கள் குழுவிற்கு நிறைய பட்டறிவைத் தந்தது. "நந்தலாலா' அனுபவங்கள் எங்களை புடம்போட்டன. அசோகமித்ரனின் "ஸ்டார் கிராஸ்டு' ஆங்கில நாவலுக்கு எந்த வகையிலும் சளைக்காத காவியத்தன்மை கொண்ட சம்பவங்கள் "நந்தலாலா'வில் நடந்தேறின என்பது தனிக்கதை. எல்லோரும் குழந்தையிலிருந்துதான் வளர ஆரம்பித்தோம் (மகா கண்டுபிடிப்பு!) ஆனால், சமூகத்தின் பாதையில் பயணிக்கும்போது, நாம் நம் குழந்தைத்தனத்தை தவறவிட்டு விடுகிறோம். குழந்தைத்தனத்தோடு இருக்கும்போது வாழ்வதற்கான அர்த்தத்தை நாம் உணரமுடியும் என்பதை உள்ளுறையாக (sub text) வைத்து உருவாக்கப்பட்ட "நந்தலாலா'வில் தமிழ் சினிமா காணாத பல வரலாற்று அதிசயங்கள் நிறைய இருக்கிறது....

Comments

Popular Posts