எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது...

மாற்று சினிமா மற்றும் திரைப்படக் கல்லூரி ஆளுமைகள் ஆகிய இரு புத்தகங்கள் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது...

கிராபியென் ப்ளாக் ஒரு இளம் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், திரைத்துறையிலும் பத்திரிக்கையிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார், அவரது இரண்டு புத்தகங்களை சமீபத்தில் வாசித்தேன், ஒன்று மாற்று சினிமா, மற்றது திரைப்படக் கல்லூரி ஆளுமைகள், இரண்டையும் புதிய கோணம் என்ற பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதில் மாற்று சினிமா தமிழில் வெளியான 32 சிறந்த குறும்படங்களைப் பற்றியது, குறும்படத்திற்கான விமர்சனம் என்பதோடு. அந்த இயக்குனரைப் பற்றியும் குறும்படங்களின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது,

குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான முதற்படி என்று சொல்வது சரியான ஒன்றே, இதன் வழியே புதிய கதைக்களம் காட்சிமொழி மற்றும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள முடியும், தமிழில் பல நல்ல குறும்படங்கள் வெளியாகி திரைப்பட விழாக்களில் முக்கிய விருதுகளை பெற்றிருக்கின்றன, குறும்பட உருவாக்கம் மற்றும் திரையிடுவதற்காக தமிழ் ஸ்டுடியோ. நிழல் போல புதிய அமைப்புகள் உருவாகி சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன, இவை தமிழகம் முழுவதும் குறும்படம் எடுக்கப் பயிற்சி தருகின்றன, கிராபியென் குறும்படங்களை விமர்சனம் செய்வதன் ஊடாகவே வாழ்வின் அரிய தருணங்களையும் சமகால அரசியல் சமூக மாற்றங்கள் குறித்த அக்கறையையும் எழுதுகிறார், காட்சிரூபமாக மொழியைக் கையாளுவதில் அவருக்கு நல்ல தேர்ச்சியிருக்கிறது, திரைப்படக் கல்லூரி ஆளுமைகள் என்ற புத்தகம் சென்னை அரசு திரைப்படக்கல்லூரியில் படித்து தமிழ் சினிமாவிற்குப் பங்காற்றியுள்ள பத்து முக்கிய கலைஞர்களைப் பற்றியது, ஊமை விழிகள் வழியாக சென்னை திரைப்படக்கல்லூரி அடைந்த கவனம் மற்றும் ஆபாவாணன் குறித்தும் நடிப்பு பயிற்சி பெற்ற ரகுவரன் பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளன.

மாற்று தமிழ் சினிமாவை உருவாக்க விரும்பும் பலருக்கும் இந்த புத்தகங்கள் தூண்டுகோலாக அமையும் , புதிதாக்க் குறும்படம் எடுக்க விரும்புவர்களுக்கு இது ஒரு கையேடாக இருக்கும், அவ்வகையில் கிராபியன் ப்ளாக்கின் இரண்டு புத்தகங்களும் முக்கியமானவை.

***

திரைப்படக் கல்லூரி ஆளுமைகள்

கிராபியென் ப்ளாக்

விலை ரூ80

மாற்று சினிமா / கிராபியென் ப்ளாக்

விலை ரூ 90

கிடைக்குமிடம்:

பாரதி புத்தகாலயம்

7 இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18.

தொலை 044 24332424, 24332924,

Comments

Popular Posts