முலைகளின் தோற்றங்கள்

ர்முனையின்
அழகு பொருந்திய
சின்னஞ்சிறு
முலைகளையுடைய
தோழியை
நடுச்சாமத்தின்
பெருந்துயரத்தின் மீதேறிய
கடுங்காமத்தின்
வழி கண்டேன்

என்னுடலைப் பற்றி
எரியச் செய்யும்
முலைகளை
அவள் மட்டுமே
கொண்டிருந்ததைக் கண்டு
சாத்தான்
உருக்கொண்டு எழுந்து
எனை கொடுந்தீயில்
தள்ளியது

சிவந்த முலைகளையொத்த
அவளின் கறும் முலைக்காம்புகள்
கண்களின் ஊடேறி
விழித்திரையை சுற்ற
பிம்பங்கள் யாவிலும்
முலைகளின்
தோற்றங்கள்

எல்லா முலைகளும்
ஒன்றைப்போலில்லை
காமத்தைக் கைப்பற்ற
சில முலைகளால்
மட்டுமே முடிகிறது

முலைப்பிம்பங்களால்
மூச்சடைத்து தவித்தேன்
பேரிருளில்
பெருங்கனவைக் கொண்ட
முலைகளின்
சூட்டின் வழியே
பயந்தொளிந்தது
காமம்

முலைகளின்
அடங்காப்பசியில்
நிறைந்திருந்தது கவனம்
யவனத்தின் சொல்கொண்டு
காமத்தின்
கதவைத் திறந்தால்
பெருகியொழுகியது
பேரண்டம்

இரண்டு திருநங்கைகளின்
ஒற்றைச் சிரிப்பில்
ஒளிவு மறைவில்லை
நவயுகக் கன்னியின்
முலைக்காம்புகளில்தான்
முன்னேற இயலா
முட்டுக்கட்டைகள்
வழிந்தோடும்
பெருங்காமம்
வனம் புகுந்தது
அழகிய
முலைகளையொத்தவளே
எதிரெ வந்தாள்
பருத்த பிருஷ்டங்களோடு!

Comments

Popular Posts