ஏவாளின் தூரிகை

ல்லா கனவுகளும்
உறங்கப் போயிருந்த
ஏகாந்த நல்லிரவு அது
மரணத்தின் கடைசி வாசலில்
நான் காத்துக் கிடந்த பொழுது
அதீதத்தின் நம்பிக்கை கையொன்று
என் கைகளை இருகப்பற்றி
மொட்டை மாடிக்கு
இழுத்து வந்தது

இளையராஜாவின் தேனிசை கீதம்
காற்றில் தவழ
மனதின் தாழ்வாரத்திலோ ஏவாள்
கச்சைக்கட்டி உட்கார்ந்திருந்தாள்
அந்த நடுநிசியில்
கையில் கரிய நிறத் தூரிகையோடு
வெள்ளைத் தாட்களில்
ஏவாளை வரைய முற்பட்டேன்
அடர்ந்த பெருங்காட்டில்
சிகப்புத் தாவணியின்
முந்தானையால் இறுக்கி கட்டப்பட்டு
தனித்துக் கிடந்த
என் ஏவாளின்
கைகளுக்குள்
சிக்கிக் கொண்டிருந்தது
என் தூரிகை

மொட்டை மாடியில்
முணுமுணுத்துக் கிடந்த
என் பெருங்கோபத்தின் சில்லொன்று
பட்டென்று பறந்து
ஏவாளின் கையறுத்து
காட்டை எரிக்க
தூரிகையை இறுகப்பற்றியபடியே
இழுத்து அணைத்துக்கொண்டாள்
ஏவாள் என்னை
அதீதம் ஒளிந்துகொண்டு சிரிக்க
நவீனம் பல்லிளிக்க
மாயத்தின் கைகொண்டு
அவள் பிருஷ்டத்தை
இழுத்து அணைத்தப்படி
அதனுள் வண்ணங்களைத்
தேடியலைந்தேன்
பெரும்பசியுடன் காத்துக்கிடந்த
ஏவாளுக்கு நான் தீனியானேன்
தனித்துக்கிடந்தது
இருளில்
தனியே
என் தூரிகை!

Comments

Popular Posts