பொன்னிற தேவதையாக அக்கா...

ரு துளி புன்னகை போதும் உலகத்தின் துயரங்கள் மறக்க... துயரத்தை துரத்துதல் புன்னகையின் குணம் அன்று. அது சிரிக்க மறந்த மனிதனின் குணம். குணம் முக்கியமா சூழல் முக்கியமா தெரியவில்லை புன்னகைக்க. மனம் விழிக்கும் போது மட்டுமே இதழ் புன்னகைக்கிறது என்...கிறான் நண்பன். தெரியவில்லை மனத்தின் போக்கு. புன்னகைக்கு யாரேனும் விலைமதிப்பிட்டிருப்பார்களா என்பதும் தெரியவில்லை. கவிஞன் அல்லது கவிஞிகள் தவிர்த்து புன்னகையைப் பற்றிய யாரேனும் விவாதிப்பார்களா. அப்படியிருந்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். டயானாவின் புன்னகையும், அன்னை தெரசாவின் புன்னகையும் ஒரே வகையைச் சேர்ந்ததில்லை என்கிற நீண்ட சந்தேகம் எனக்கு இன்றும் உண்டு. என் அக்கா கவினின் புன்னகைகள் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படும். சந்தோஷத்தில், துயரத்தில், நட்புக்கு மத்தியில், அலுவலகத்தில், பாராட்டுக் கூட்டங்களில், போராட்டக் களத்தில்... ஆனால் ஒவ்வொரு புன்னகைக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள்... புன்னகை மன்னன் என்றொரு படத்தை கே.பி. இயக்கியிருக்கிறார். அதில் ரேகாவின் புன்னகையும், மறைந்த ஸ்ரீவித்யாவின் புன்னகை மட்டுமே நினைவில் நிற்கிறது. ஸ்ரீவித்யாவின் புன்னகைக்கு பின்னால் வாஞ்சையோடு முதுகைத் தடவி கொடுக்கும் அன்பு இருப்பதை யாரேனும் உணர்ந்திருக்கிறீர்களா. புன்னகையின் மொழியை இதுவரை யாரேனும் மொழி்ப் பெயர்த்திருந்தால் தயவு செய்து எனக்கு மின் அஞ்சல் செய்யுங்கள். இந்தப் புன்னகையை படம் பிடித்தவர் யாராயிருந்தாலும் அவருக்கு என் பாராட்டுக்கள்... புன்னகைப்பது வாழ்வில் அபூர்வமாய்தான் இருக்கிறது... அதை படம்பிடிப்பதும் அபூர்வமான செயல்தான்... சூரியன் தகித்து எழும் மஞ்சள் ஆற்றில் குளித்து பொன்னிற தேவதையாக அக்கா புதிய திசையை நோக்கிப் புறப்படுவது போல் உள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு மனசுக்குப் பிடித்த புகைப்படம்...

Comments

Popular Posts