கையில் கொஞ்சம் பணமும், திறந்த மனதோடும் புத்தகத் திருவிழாவின் வாசலுக்குள்...!

புதிய ஆண்டின் தொடக்கத்தில் எல்லோரிடமும் எதோ ஒரு திட்டமிடல் நிச்சயம் இருக்கும். ஆனால், அந்த திட்டமிடல் அந்தஆண்டின் இறுதியில் நிறைவேறியதா என்று ஆலோசித்து பார்த்தால் திட்டமிடலில் பாதி முடிந்தும்... சிலவற்றை முடிக்க£மல்...மேலும் சிலவற்றை தொடங்காமலேயே கூட இருந்திருப்போம். ஒவ்வொரு ஆண்டும் அப்படியான ஒருதிட்டமிடல் எண்ணிடமும் உண்டு. அது, புத்தகத் திருவிழாவின் போது வாங்கிய புத்தகங்களை முழுவதுமாக வாசித்து விட வேண்டும்என்கிற முனைப்பு அல்லது வேகம், தேடல், வெறி உண்டு. கடந்த சில வருடங்களாக அப்படியாக வாங்கிய நூல்களின்எண்ணிக்கையில் பத்து சதவீத புத்தகங்களையே வாசிக்க முடிந்து இருக்கிறது. புத்தக வரவேற்பறையில் முதல் பக்கம் கூடதிறக்கப்படாமல் இன்னும் என்னை அழைத்தபடியே அந்த புத்தகங்கள் விடும் பெரும் மூச்சுக்காற்றின் வெப்பமும், விசும்பலும் தினசரி படுக்கையை விரிக்கும் முன் கேட்டபடியேதான் உறங்கச் செல்கிறேன். ஆனாலும், தலையணைக்குப் பக்கத்தில் திறக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் வாசனையும், வெது வெதுப்பும் என் கனவுலகுக்குள் புகுந்து என்னை வழிநடத்திக்கொண்டே இருக்கிறது.

அப்படியாக, 2013­ம் ஆண்டில் என் கையை இறுகப்பற்றிக்கொண்டு என்னை ஒரு நூற்றாண்டு காலம் பின்னோக்கிஅழைத்துக் கொண்டு சென்ற புத்தகம் எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய ''ஒரு நூற்றாண்டின் தனிமை''. ஒருஆண்டுக்குள் ஒரு நூற்றாண்டை வாசிக்க முடியுமா? என்றால் என்னால் முடியாது என்றுதான் சொல்வேன். ஒவ்வொரு நூறுபக்கங்கள் வாசித்த பிறகு, ஒரு மாதம் அந்தக் கதாபாத்திரங்களோடு சிறிது நேரமாவது மனம் விட்டு பேசினால்தான்...அடுத்த நூறு பக்கத்திற்கு போக முடிகிறது. கதாபாத்திரங்களின் சொல்லவொன்னா துயரம் படிந்த வாழ்க்கையின் மீது பயணம்செய்யும்போது கிடைக்கும் அனுபவங்கள் தனியாக தொகுக்கப்பட வேண்டியவை. ''ஒரு நூற்றாண்டின் தனிமை'' நாவலின் 250பக்கங்கள் மட்டுமே தாண்டியிருக்கிறேன். அநேகமாக இந்த ஆண்டில் அந்த நாவலின் மிச்சமுள்ள பக்கங்களில் வாழ்வேன்என்று எண்ணுகிறேன். புத்தகத்தை ஏன் வாசிக்க வேண்டும், புத்தகங்களை ஏன் வாங்க வேண்டும், புத்தகங்கள் நமக்கு எதை வழங்குகின்றன?

வாசிப்பின் ருசி எப்படியிருக்கும் ? என்றெல்லாம் கேட்கும் நண்பர்களுக்கு நான் ஒன்றை மட்டுமே இதுவரை சொல்லி வந்திருக்கிறேன். ''முதலில் புத்தகத்தை திற....''.ரஷியாவில் உள்ள பீட்டர்ஸ் பர்க் எங்கிருக்கிறது­? என்று கேட்டால் பேந்த பேந்ததான் விழிப்பேன். உண்மையில் பீட்டர்ஸ்பர்க் எங்கிருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், பீட்டர்ஸ் பர்க்கின் அழகான சித்திரம் எனக்குள் ஒளிந்திருக்கிறது. இவான்துர்கினேவ் எழுதியுள்ள மூன்று காதல் கதைகள் நாவலை வாசித்துப் பாருங்கள். உங்களுக்குள்ளும் அழகான பீட்டர்ஸ் பர்கின்சித்திரம் வந்து ஒளிந்து கொள்ளும். புத்தகங்களி னால் என்ன கிடைக்கிறது... என்று சதா ஒரே கேள்வியை கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு இதுதான் பதில். என்னுடைய நண்பர்களில் பலர், புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதில்சிலர், அந்த கதைகளில் உள்ள கதாபாத்திரங்களை தங்களது படங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் க£ட்சிகளையும், வசனங்களையும் தமது தேவைக்கேற்ப சுடுகிறார்கள். புத்தகங்கள் ஒவ்வொரு மனிதனக்கும் ஒவ்வொருதிசையையும், வாழ்க்கையையும் புதைத்து வைத்துக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும்...தமிழகத்தில் எழுத்தாளர்களின் எண்ணிக்கைக்கூடிக் கொண்டே போகிறது. இது, வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதை காட்டுகிறதா? அல்லது புத்தகங்களின்தேவை அதிகரித்துவிட்டதா என்றெல்லாம் விவாதக் களம் நடத்த வேண்டியதில்லை. விஷயம், ரொம்ப சிம்பிள்! சர்வதேசஅளவிலும், இந்திய அளவிலும், தமிழக அளவிலும் எழுத்தாளர்களுக்கான அங்கீகாரம் மற்ற ஆண்டுகளை காட்டிலும்அதிகரித்திருப்பதுதான். ஆனால், எழுத வந்த எல்லோருக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டதா என்றால்,விரிக்கப்படவில்லை... ஆனால், தயாராகிக் கொண்டிருக்கிறது என்றுதான் அழுத்தமாக சொல்ல வேண்டியிருக்கிறது. ந£ற்பது புத்தகங்களுக்கு மேல் எழுதினாலும் அறியப்படாத எழுத்தாளர்கள் ஒரிரு புத்தகங்களிலேயே எல்லோருக்கும் தெரிந்தமுகமாக... தவிர்க்கப்பட முடியாத ஆளுமையாகவும் இருக்கிறார்கள். உதாரணமாக, நவீன எழுத்தின் அடையாளமாக உள்ள ஆர்.அபிலாஷ் மற்றும் ராஜுமுருகன் போன்றோரை உதாரணங்களாக காட்ட முடியும். பெரும் வாசகர் வட்டத்தை இந்தஇருவரும் தங்களுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுத்து பேஸ்புக், டிவிட்டர், பிளாக்கில் எழுதி விட முடியாது!

ஆண்டுக்கு ஒரு புத்தகம் எழுதி, வெளியானாலே பெரும்பாடு என்ற காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது. குறைந்ததுபத்து புத்தகங்கள் என்கிற எண்ணிக்கையே இப்போது காணப்படுகிறது. அந்த வகையில், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின்பத்துக்கும் மேற்பட்ட புதிய நூல்கள் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் உங்களின் கரங்களில் தவழ வேண்டி காத்துக்கிடக்கிறது. பிரபல பதிப்பகம் ஒன்றின் வெளியீடாக வர உள்ள அவரது நூல்களில் நிமித்தம் என்கிற நாவலும் அடங்கும். ஏழு உலக இலக்கிய அறிமுகங்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு சினிமா நூல், ஒரு பயண நூல் என்று எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துலக்குள் உங்களுக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் பெரும்வீச்சோடு தனது ''சூரியனுக்கு அருகில் ஒரு வீடு '' என்கிற கவிதைத் தொகுப்பும், பிரபல புலன£ய்வு இதழில் தொடராக வெளிவந்த சமகாலத்தில் பற்றி எரிந்த பிரச்சனைகள் குறித்த மனுஷய் புத்திரனின் ப£ர்வைகள்... எண்ணங்கள்... தேடல்கள்... ஆகியவை ''குற்றமும் நீதியும்'', கைவிட்ட கொலைக் கடவுள்'' என்ற தலைப்புகளில்வெளியாக உள்ளன. இலக்கித்தியத்தில், அரசியலில், சமூகத்தில் நிகழ்ந்த பல பிரச்சனைகளுக்கு மறந்து கூட பேஸ்புக்கில்லைக் போடக் கூட பயப்படும் மனிதர்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான செல்போன் மிரட்டல்களை எதிர்கொண்டு... அத்தகையபிரச்சனைகளை மனுஷய் புத்திரன் மட்டுமே தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தனக்கான காரியத்தை சாதித்துக்கொள்ளஎந்தச் சார்பும் இன்றி அத்தகைய கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை... தொடர்ந்து வாசிக்க முடியாதவர்கள், அழகிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ள அந்த இரு நூல்களையும் திறங்கள்.... நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் மாற்றத்துக்கானமுதல் விதை.. அங்கேதான் ஒளிந்துகொண்டிருக்கிறது!

தனது ''அழகி'', ''சொல்ல மறந்த கதை'' உள்ளிட்ட படங்களின் மூலமாக நம்மைக் கவர்ந்த இயக்குநர் தங்கர்பச்சான் ஒரு எழுத்த£ளனாக இருப்பதையே பெரிதும் விரும்புவதாக பல நேர்காணல்களில் சொல்லி வந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் செ£ல்வதை கடைப்பிடிப்பது இயக்குநர்களுக்கு பொருந்தவே பொருந்தாமல் இருக்கும் சூழலில், ''தங்கர்பச்சான் கதைகள்''என்கிற பெயரில் சிறுகதை தொகுப்பு ஒன்றை கொண்டு வருகிறார். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம்,நெய்வேலி வாழ் விவசாயிகளின் வியர்வையில் இருந்து வெளிவரும் ஆயிரமாயிரம் கதைகளை நீங்கள் இதுவரை கேட்க
£மல் இருந்தால், கொஞ்சம் காது கொடுத்து கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு தங்கர்பச்சானையும் பிடிக்கும். சாருநிவேதிதாவைப் போல, தவறாக கட்டமைக்கப்பட்ட தங்கரின் பிம்பம் உடைவதை அவரது எழுத்துக்களில் இருந்தே நீங்கள்கண்டுகொள்வீர்கள்.

தமிழ் இலக்கியச் சூழலில் அதிகம் கொண்டாடப்படாத எழுத்தாளர்களின் பட்டியல்களில் அசோகமித்திரனுக்கும் இடம் உண்டு. காலம்கடந்துகொண்டே போனாலும் அவரது எழுத்தின் வீச்சு இன்னும் குறையாமல்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவோடு நெருக்கமானஉறவு அசோகமித்திரனுக்கு இருந்தாலும், அவரைப் பற்றிய இயக்குநர்களின் பார்வை என்னவோ... தலைகீழாகத்தான்
இருக்கிறது. சமீப காலமாக தனது அட்டைப் படத்திலும், வடிவமைப்பிலும் கவனம் செலுத்தி வரும் பதிப்பகம் ஒன்றில் இருந்து, தண்ணீர் என்கிற நாவலும், படைப்பாளிகள் உலகம் மற்றும் இந்திய படைப்பாளிகள் உலகம் ஆகிய நூல்கள் வெளிவர உள்ளன.

 அசோகமித்திரனின் ''கரைந்த நிழல்கள்'' நாவலை படித்து, முடித்த பிறகுதான் இயக்குநர் மிஷ்கினிடம் இருந்து உதவி இயக்குநர் பதவியை தூக்கிப்போட்டுவிட்டு ஓடி வந்தேன் என்பதை நண்பர்கள் நன்கு அறிவார்கள். 18வது அட்சக்கோடு அவரத சிறந்த நாவல் என்று எல்லோரும் குறிப்பிட்டபோதும், அந்த நாவலை பலமுறை எடுத்துப் பார்த்துவிட்டு,அப்படியே நூலக அரங்குக்குள் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். ஒரு புத்தகம் உங்களுக்கு எப்போது, எப்படி எந்தவிதமாய் வந்து சேர வேண்டுமோ அப்போது அவ்விதமாய் வந்து சேரும் என்பது எனது நிலைப்பாடு. அப்படியாக, அசே£கமித்திரனை வாசிப்பவர்கள் சென்னைக்குள் ஒரு புதிய உலகத்தை தரிசிக்க முடியும். அதே பதிப்பகம், ஜெயமோகனின்
''உமைச்செந்நாய்'' மற்றும் அவரது குறுநாவல்கள், சிறுகதைகள் தனித்தனியே தொகுப்பாக கொண்டுவந்திருக்கிறது.

சமூகத்தில் ஜெயமோகனைப் பற்றிய பிம்பங்கள் குழப்பமான மனநிலையையே எனக்கும் உருவாக்கியிருக்கிறது. அவரது
எழுத்துக்களைப் பற்றி சிலாகிக்கும் அளவுக்கு எந்த படைப்புகளையும் படிக்கவில்லை அல்லது எதுவும் இன்னும் என்னை ­­ஈர்க்கவில்லை என்றேதான் சொல்ல வேண்டும். சமகாலத்தில் என்­னுடைய சக நண்பர்கள் அவரின் எழுத்துக்களில் இருந்து விலகியே இருக்கிறார்கள். காரணம் என்னவோ? ஒரு எழுத்தாளனின் நூலை வாசிக்காமல் அவரைப் பற்றிய கருத்துருவாக்கம் தவறாக இருக்கும் என்பது எனக்கும் பொருந்தும். அந்தவகையில் ஜெயமோகனின் நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்கிற கட்டுரை தொகுப்பும், மலையாளத்தின் உன்னத திரைக்கதை ஆசிரியரான லோகிததாஸ் பற்றிய அவரது எண்ணங்களை மட்டுமே வாசிக்க முடிந்திருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இரண்டு நூலைத் தாண்டி எந்தப் புத்தகத்தின் மீது கவனம்
குவியாமல் இருப்பதன் ரகசியத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்!

இயக்குநர் மிஷ்கினை நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் மீது இருந்த கோபத்தையெல்லாம் தூக்கி சற்று ஓரமாக வைத்துவிட்டு...அவரது அலுவலகத்துக்கு சென்றபோதுதான் ''சிதம்பர நினைவுகள்'' புத்தகத்தை பார்த்தேன். எழுத்தாளர் பவா நடத்திக்கொண்டிருக்கும் பதிப்பகத்தில் இருந்து... வெளியான அந்தப் புத்தகத்தை கண்ணை மூடிக்கொண்டு எதோ ஒரு பக்கத்தை எடுத்து வாசிக்கத் தெ£டங்கினேன். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்கிற படைப்பாளியை தரிசிக்க அந்தப் புத்தகமே காரணமாய் இருந்தது.

ஒவ்வொரு புத்தகமும் நமக்குள் மூடிக்கொண்டிருக்கும் எதோ ஒரு கதவை திறக்கிறது. அப்படியாக, அந்தப் புத்தகம் பல கதவுகளைதிறந்து கொண்டே சென்றது. பிறகு, அந்த நூலை பார்க்கிற நண்பர்களுக்கு எல்லாம் வாங்கித் தருகிற அளவுக்கு அந்தப் புத்தகம்என்னோடு கலந்துவிட்டது. ஒரு நல்ல படைப்பாளியை அடையாளம் காட்டவும் நல்ல மனசு வேண்டும். அது பவாவுக்கு வ£ய்த்திருக்கிறது. ஆர்.ஆர்.சீனிவாசனின் மூலம் வரப்பெற்ற ஜான் ஆபிரகாம் புத்தகமும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தவை. வ£ழ்க்கையை எதிர்கொண்டு போராகிற துணிவை சிதம்பர நினைவுகள் புத்தகம் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. அதன் தெ£டர்ச்சியாகதான் பவாவின் கட்டுரைகள் அடங்கிய ''19.டி.எம்.சாரோனிலிருந்து...'' நூலை வாசித்தேன். சக மனிதர்களைப்பற்றிய பவாவின் எண்ணங்களும், சந்திப்புகளும், எளிதில் யாருக்கும் கிடைக்காத அனுபவங்களை... அப்படியே நேரில் கண்டது

போன்ற உணர்வை அந்த நூல் எனக்குள் ஏற்படுத்திய சிலிர்ப்பு இப்போதும் ஞாபக அறையில் பத்திரமாகத்தான் இருக்கிறது.பவாவின் உலகத்தில் மட்டும்தான் விதவிதமான பாத்திரங்கள்.... உண்மையில் பவா ஆசிர்வதிக்கப்பட்டவர். திருவண்ண£மலையில் எழுத்தாளர் சங்க மாநாட்டின் போது, அவரை பார்த்த மாத்திரத்தில் பிடித்தபோனதற்கு மிகவும் சரியான க
£ரணம்.... அவர் என்னை விட கறுப்பானவர்... அழகானவர் என்பதுதான்....! கருணாவும், சைதை ஜெ.வும் என்னை பவாவிடம் அறிமுகப்படுத்தியபோது சில கவிதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். பலமுறை அவரின் அருகே இருந்தபோதும்... அவரிடம் பேசியதில்லை. அவரை கவனித்துக் கொண்டிருப்பதே அதைவிடப் போதுமானதாக எனக்கு இருந்திருக்கிறது. பவாவைபற்றி... நண்பர்கள் கதைத்துக்கொண்டே இருப்பார்கள். பவா... என்னுடைய கேமிரா கோணங்களுக்குள் சிக்கியிருப்பது எனக்கு கிடைத்த வரம். அதற்கு ஒரே காரணம்தான் உண்டு. யோகி ராம்சுரத்குமார். கொல்கத்தாவில் படப்பிடிப்பில் சிக்கியிருந்தபே£து அக தரிசனத்தின் மூலம் எனக்கு வழிகாட்டியவர் யோகி. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை பாலகுமாரனை சந்தித்தபோதுசொன்னார். ''நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்...''. அதன்பின் என் வாழ்க்கையில் எல்லாம் மாறியது தனிக் கதை.

யோகியின் மிக நெருங்கிய நண்பர் பவா என்பதை அறிந்தபோது உண்மையில் அவர் மீது எனக்கு பொறாமையாகதான் இருந்தது. புத்தகச் சந்தையில் ஒரே
இடத்தில் ஆறு, ஏழு ஆளுமைகளை நிற்பதைப் பார்த்தால் நிச்சயம் அங்கே நீங்கள் பவாவை பார்க்க முடியும். எழுத்தாளர் பவ£. செல்லத்ததுரையிடம் இருந்து இந்த ஆண்டு ''நிலம்'' என்கிற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. ''வலி'' என்கிறசிறுகதைத் தொகுப்பும் வெளியாக உள்ளது. இதோ... இந்த கட்டுரைக்காகத்தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு பவாவிடம்பேசினேன். அதுவே அந்த நாளை அழகாக்கிவிட்டது.

ஒவ்வொரு புத்தகச் சந்தையின்போதும் மனதில் சட்டமிட்டு மாட்டப்பட்ட வான்கோவின் ஓவியம்போல ஒரு நிகழ்வு நடந்தேறுவது உண்டு. அது வண்ணதாசனை சந்திக்கிற தருணம். சில நிமிடங்கள் மட்டுமே நீளும் பேச்சு... அந்த வருடத்தின் அத்தனை ம£தத்திலும் அவரது நினைவுகள் நகர்ந்து கொண்டேயிருக்கும். திருவிழாவில் காதலியின் முகத்தைப் பார்த்தால் ஏற்படுகிறபரவசம் ஒவ்வொரு முறையும் வண்ணதாசனைப் பார்க்கும் யாவருக்கும் ஏற்படும். ''பெயர் தெரியாமல் ஒரு பறவை'', ''தோட்டத்துக்கு
வெளியேயும் சில பூக்கள்'', ''ஒளியிலே தெரிவது'' என அவரது சிறுகதைத் தொகுதிகள் ஒவ்வொன்றும் தனித்துவமான கதாப£த்திரங்களை கொண்டவை. ஒரு போதும் தேயாத பென்சில் சிறுகதையில் வரும் அந்த அக்காவைப் பார்த்தால், ஒரு டஜன்பென்சில் வாங்கிக் கொடுத்து, அவர் கையால் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. இந்த ஆண்டு

கல்யாண்ஜி என்கிற பெயரில் அவர் எழுதி வரும் ''மீனைப் போல் இருக்கிற மீன்''. ''பூனை எழுதிய அறை'' ஆகிய கவிதைநூல்கள் வெளியாகின்றன. வண்ணதாசனிடம் விடைபெறும்போது கைகுலுக்கினேன். அப்படியே எனது கைகளை ஒரு கோழி தன் குஞ்சுகளை அடைகாப்பது போல, சில நொடிகள் தன் கைகளுக்குள் அடைகாத்து கொண்டிருந்தார். பிரிய மனமில்லைதான்

ஆனாலும் பிரிந்தேன். இந்த புத்தகச் சந்தையில் அவரது கைகளுக்குள் அகப்படும் பாக்கியம் கிடைக்குமா? தெரியவில்லை.வண்ணதாசனை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்று பல பகல்வேளைகளிலும் கூட யோசித்திருக்கிறேன். வாழ்க்கையின் அழக£ன பக்கங்களை காட்டிய காதலியை யாருக்காவது பிடிக்காமல் போய்விடுமான என்ன? என்று ஒரு நாள் பதில் வந்தது! இந்த நிமிடம் வரை உங்களுடைய வாழ்க்கை போரடித்துக் கொண்டிருக்கிறதா.... இல்லையென்றால் சதா உங்களை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறதா... வண்ணதாசனின் எந்த சிறுகதையை வேண்டுமானாலும் எந்த இடத்தில் இருந்து வேண்டும£னாலும் தொடங்கி வாசித்துப் பாருங்கள்... முடியவில்லையா... கொஞ்சம் கல்யாண்ஜியோடு பேசிப்பாருங்கள்...அல்லது அவரது அருகிலாவது மௌனமாக நின்று கொண்டிருங்கள்... அதுவே போதும்... உங்கள் வாழ்க்கை சரியானப்
பாதையை நோக்கி பயணிப்பதற்கு...!

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் ஏராளமான புத்தகப் பிரியர்களும், பதிப்பாளர்களும், எழுத்த£ளர்களும் கூடுகிறார்கள். இந்த ஆண்டும் அவர்கள் கூடி, தங்களது வாழ்க்கை குறித்தோ, தான் எழுதியுள்ள நாவல், சிறுகதை,கட்டுரை, கவிதை, மொழிப்பெயர்ப்பு குறித்தோ கலந்துரையாடுவார்கள்... அல்லது கதைக்ககூடும். அவர்களோடு...
அவர்களுக்கு தெரியாமல் அந்தக் கூட்டத்தில் ஆயிரமாயிரம் கதை மாந்தர்களும், கதாபாத்திரங்களும் உலவிக் கொண்டிருக்கும்.

தஸ்காவெஸ்கி, டால்ஸ்டாய், ஓரான் பாமுக், ஆண்டன் செகாவ், பஷீரின் பாத்திரங்களும் கூட அங்கே கூடியிருக்கும். திறந்த மனதே£டு நீங்கள் அவர்களை தேடிச் சென்றால்... நிச்சயம் அவர்கள் உங்களுக்கு காட்சி தருவார்கள். உங்களை வழிநடத்திச்செல்ல அங்கே அவர்களது சிப்பந்திகள் காத்திருப்பார்கள். உங்களை பாதுகாப்பாக நூலக அரங்குக்குள் அழைத்துச்
செல்ல சிப்பாய்களும்... பழுப்பேறிய துப்பாக்கிகளோடு உங்களுடைய வருகைக்காக விறைப்புடன் காத்துக் கிடக்கிறார்கள்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்... கொஞ்சம் கையில் பணமும், எந்த
திருவிழாவின் வாசலுக்குள் காலடி எடுத்து வைப்பதுதான்!

Comments

Popular Posts