திரைக்கதையை யாரும் சுட்டுவிடக் கூடாது...!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணை உறுப்பினராக சமீபத்தில் இணைந்துள்ளேன்.... நண்பர்கள் இதெல்லாம் எதற்கு இப்போ? என்று கேட்டு நச்சரிக்கிறார்கள். நான் இயக்க உள்ள படங்களின் திரைக்கதையை யாரும் சுட்டுவிடக் கூடாது என்பதற்காக மட்டுமல்ல... ஒரு எழுத்தாளனாக திரைப்பட எழுத்தாளர்களோடு பரிச்சயம் வேண்டும் என்பதற்காகவும்தான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன்! ஒரு திரைப்பட இயக்குநருக்கான முதல் பயணம் இங்கிருந்துதான் துவங்குவதாகவும் எண்ணுகிறேன். தமிழ் சினிமா சூழல் முன்பு போல இப்போதில்லை. கதையின் தலைப்பை திருடுவதில் தொடங்கி... முழு திரைக்கதையையும் தனக்காக்கி கொள்வது வரை மிக மோசமான அறிவுத் திருட்டு தற்போது மிகவும் காட்டமாக கோலிவுட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வகையான திருட்டு மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் நடக்கிறது என்பதுதான் மிகவும் மோசமான உண்மை.


தமிழ் இலக்கிய சூழலில் எழுத்தாளன் எவ்வாறு மதிக்கப்படுகிறான் என்பதற்கு சாரு நிவேதிதாவின் இணையதளப் பக்கங்களை வாசிக்கவும். ஒரு நூலை எழுதி, அது வெளியாகி...அவனுக்கான அங்கீகாரம் கிடைப்பதற்குள் அவனுடைய வாழ்வு முடிந்தே போகும். அப்படியும் அவனுக்கான வெளிச்சம் கிடைத்தால்... அதுவும் வாழும் காலம் வரை வருமா என்றால் வராது. இதற்கு நிறைய உதாரண எழுத்தாளர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது பலரும் அறிந்ததே! அண்மையில் நடந்த புத்தகச் சந்தையில் கௌரவிக்கப்பட்டவர்கள் அதிகம் கதைகளை சுட்டு படம் இயக்கிய, நடித்த பிரபலங்களுக்கா... தன் கதையைதான் சுட்டு படமாக்கி.... பணம் கொழுத்தார்கள் என்பதை அறியாத எழுத்தாளருக்காகவா என்பதை தனியொரு பட்டிமன்றம் நடத்தி... உங்களோடு உறவாடுகிறேன் நண்பர்களே...!

Comments

Popular Posts