நவீன தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புதுவரவு !

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் கணிப்பொறி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர் சக்திவேல். பின்னர் தரமணி எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பட்டயமும் பெற்றார். திங்கள் என்ற பெயரில் அவர் இயக்கிய குறும்படம் விளையாட்டுகளில் இருந்து பெண்கள் அந்நியப்படுத்துவதை தோலுரிக்கிறது. கடந்த பல வருடங்களாக எனக்கு கற்பிக்கப்பட்ட சமூக, அரசியல், கலை, இலக்கிய பார்வையை நண்பர்கள் அனைவரிடத்திலும் பகிர்ந்து வந்திருக்கிறேன். பலர் அதை காலவிரயமாகதான் பார்த்திருக்கிறார்கள்.ஆனால், அத்தகைய அறிவுஜீவிகளிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் சக்திவேல். நான் கற்பிக்கும் சமூக, அரசியல் பார்வையை தன் வாழ்வில் சோதித்து அறிந்த பின்னரே அதனை ஏற்றுக்கொண்டு வழி நடப்பவர். இலக்கியம், உலக சினிமா, பலதரப்பட்ட நண்பர்கள், பிராண்டட் லைப் ஸ்டைல் என வாழ்வை கொண்டாட்டமாக வைத்திருப்பவர்!

தொடர்ந்து சக்திவேலை எழுதச் சொல்லி பலமுறை கட்டாயப்படுத்தியிருக்கிறேன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அது இப்போது சாத்தியமாயிருக்கிறது. இளைஞர் முழக்கம் என்ற இதழில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள மெட்ராஸ் படத்திற்கு தனது விமர்சன பார்வையை முன் வைத்துள்ளார். ஒரு திரைப்படத்தில் இடம் பெறும் 24 கிராப்ட்களை புரிந்துகொண்டு விமர்சனம் எழுதுபவர்கள் நவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் குறைவு. அந்தவகையில் அதை சரியாக கற்றவர் என்கிற முறையில் சக்திவேல் எழுதியிருக்கும் விமர்சனம் பாராட்டத்தக்கது!

‘‘இலக்கியத்தில் எப்படி தலித் இலக்கியம் என்ற வகைமை உருவானதோ அதே போன்று இயக்குநர் வருகைக்குக்கு பின்பு தமிழ் சினிமாவில் தலித் சினிமா என்ற வகைமை தமிழில் உருவாகியிருக்கிறது....’’ என்று அவர் குறிப்பிட்டிருப்பதில் இருந்தும், பாஸ்ட் கட், டிஸ்ட்டபென்ஸ் எஃபெக்ட்ஸ், பில்டப் ஷாட்ஸ், எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்ஸ், ஹேலி கேம் ஷாட்ஸ், டிராக் ஷாட்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் எங்கு, எதற்காக, என்ன விதமாய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் தனக்கே உரிய மொழியில் விளக்கியிருக்கிறார்... இசை குறித்த புரிதலும் நம்மை வியக்க வைக்கிறது!

என் வாழ்க்கையில் நடந்த மாபெரும் மாற்றங்கள் தம்பி சக்திவேலை சந்திப்பதற்கு முன்பு, பின்பு என பிரித்து எழுதும் அளவுக்கு என் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்புகள் அசாதாரணமானவை. நான் சக்திவேலை கண்டடைந்ததும், அவர் என்னை கண்டடைந்ததும் ஒரே புள்ளியில் நிகழ்ந்தவை. நவீன தமிழ் இலக்கிய உலகத்தில் என்னை பின்தொடரும் முதல்வராக சக்திவேல் இருப்பதில் பெரும் மகிழ்ச்சியே... சினிமா கட்டுரைகளே எழுதுவதில்லை என்ற என் முடிவில் இருந்து... சினிமா கட்டுரை தம்பி எழுதத் தொடங்கியிருப்பது வரலாற்று நகை முரண். நவீன தமிழ் இலக்கிய உலகம் அவரை அணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே என் அவா நண்பர்களே!

Comments

Popular Posts