சலனம் - 3

டிகர் பெயருடைய அந்த தொலைக்காட்சியில் வழங்கப்பட்ட விருதுகள் குறித்து நண்பர்களின் காட்டமான விமர்சனங்கள் மிகுந்த கேள்வியை எழுப்புகின்றன. குறிப்பிட்ட ஒரு படத்துக்கு அதிகமான விருதுகளும், அளிக்கப்பட வேண்டிய படத்துக்கு நிராகரிப்பும் என அந்த சேனல் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. யாருக்கு விருது வழங்க வேண்டும், நிராகரிக்க அல்லது புறக்கணித்து, ஓரங்கட்ட வேண்டும் என்பது அந்த விருதை வழங்கும் குழுவினுடைய தீர்மானமாகவோ அல்லது அந்த விருதை இறுதி செய்கிற தலைமையின் முடிவாக கூட இருக்கலாம். ஆனால் தன்னை ஒரு நடுநிலையான தொலைக்காட்சி என்று தம்பட்டம் அடித்துக்கொண்டே ஊருக்கே தெரியமளவுக்கு தன் அரசியல் பார்வையை அது முன்வைக்கும்போதுதான் இங்கே இவ்வளவு கேள்வி எழுகிறது?

எந்த படைப்பும், படைப்பாளியும் விருதுகளுக்குப் பின்னால் அலைபவன் அல்ல! விருதுகள் பெற்ற பல படைப்பாளிகளின் படைப்புகள் அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்கள் முன்னாலேயே தற்கொலை செய்துகொண்டவை. ஒரு விருதை கூட பெறாத படைப்புகள் காலம் தாண்டியும் மனித மனங்களை சுத்தப்படுத்தியும், சந்தோஷப்படுத்தியும் வாழ்வை கொண்டாட்டமாகத்தான் வைத்திருக்கின்றன!

குறிப்பிட்ட ஒரு படத்துக்கு அதிகப்படியான விருதுகள் என்பது வரவேற்கப்பட வேண்டியதுதான்? ஆனால், அதன் பின்னால் சிறிதளவாவது நேர்மையிருக்க வேண்டும் இல்லையா? விருது வழங்குவதில் அரசு, அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், தொலைக்காட்சிகள், வார இதழ்கள் எல்லாவற்றின் பின்னாலும் உள்ள நுண்ணிய அரசியலை ஏன் நாம் ஒவ்வொரு முறையும் காணத் தவறுகிறோம் நண்பர்களே?

Comments

Popular Posts