சலனம் -7

“லைக் போடாவிட்டாலும் தங்கள் பதிவுகளை வாசிக்காமல் இல்லை.. கேவலம் லைக் ஒரு எழுத்தாளனை இந்த அளவிற்கு தரம் குறைத்துவிடுமா..? எழுத்தாளனுக்குச் செருக்குதான் உசுராக இருக்க வேண்டும். லைக் அல்ல...’’ -_ செல்வ பிரபு.

சில நேரங்களில் சிலரின் பதில்கள் எவ்வள-வு தீர்க்கமானதாக இருக்கிறது. நண்பர் ஒருவரின் முகநூலில் இன்று இந்த எதிர்வினையை படித்தபோது அதிகம் சந்தோஷப்பட்டேன்.  அன்பு ஒருபோதும் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. எதன்மீதும் பற்றற்று, எதிர்பார்ப்பின்றி, இயல்பாக இருப்பதுதான் அன்பின் இயல்பு இல்லையா? அன்பின் ஒரே நோக்கம் சக மனதை, இதயத்தை, அதன் எல்லையற்ற அழகை நேசிப்பதுதான். துயரத்தில் இருக்கும்போது தன் மடியில் சாய்த்துக்கொண்டு ஆறுதல் சொல்வதுதான். நான் உன்னை ஆற்றுதல்படுத்தினேன், அரவணைத்தேன்... நீ எனக்கு இதை செய்ய வேண்-டும் என்று ஒருபோதும் அன்பு சொல்லியிருக்கலாகாது. அப்படி ஒருபோதும் அன்பால் சொல்ல இயலாது.  நாம் ஒருவரை விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் பல்வேறு பவுதீக, ரசாயண, மனோரீதியான காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் புறக்கணிப்பதற்கு ஒரேயொரு காரணம் மட்டும்தான் இருக்க முடியும். அது எதிர்பார்ப்பு என்கிற கொடிய சாத்தான்தான்!

எழுத்தாளர் தமிழ்மகன் ஒருமுறை சொன்னார், “ப்ளாக்... உன் எழுத்தை பாராட்டி ஒரு கடிதம் வந்ததாக சொன்னாய்... உண்மையில் அது ஒரு கடிதமல்ல... ஓராயிரம் கடிதங்கள்... அப்படிதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

“எப்படி ஸார்!’’ என்று வியப்புடன் கேட்டேன்.

“பல ஆயிரம் வாசகர்கள் படித்ததும், அதை மனதுக்குள் ரசித்துக்கொள்வார்கள். சில நூறு பேர் அது குறித்து மற்றவரிடம் பகிர்ந்து கொள்வார்கள். இருபது, முப்பது பேர் அதை சம்பந்தபட்டவரின் தொலைபேசி எண், முகவரி, அலைபேசி, இமெய், பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப்....எஸ்எம்எஸ், எம்எம்எஸ் உள்ளிட்டவைகளில் பகிர்ந்து கொள் நினைத்து, காலம் அல்லது வேலைப்பளுவினால் தள்ளிப்போட்டுவிடுவார்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் தாண்டி யாரோ ஒரு முகமறியா வாசகன் மட்டும்தான் அதையெல்லாம் தாண்டி ஒரு கடிதத்தை தனக்கு விருப்பமான எழுத்தாளனுக்கு அனுப்புகிறான். ஒருபோதும் அவன் பதில் எதிர்பார்த்து எழுதுவதில்லை. அவனுடைய கடிதம் சில ஆயிரம் பேர் எழுத நினைத்துதான்’’ என்றார். அவரின் பேச்சில் நான் தெளிந்தேன். இன்னும் தெளியாமல் இருப்பவர்களுக்காக... இது!

Comments

Popular Posts