சலனம் - 4


பிரபல திரைக்கதையாசிரியரான டேவிட் மம்மட்டின் திரைக்கதை விதிகளில் அதிகம் மேற்கோள் காட்டப்படும் ''அழைப்பு (CALL) '' முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அழைப்பு வரும். அந்த அழைப்பை அவன் ஏற்றால் அவனது வாழ்க்கை சராசரி உலகத்தில் (Ordinary World) இருந்து பிரம்மாண்ட உலகு(Extraordinary World)க்குள் செல்லும். இதே இடத்தில் நீங்கள் கதாபாத்திரத்தை வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை அந்தக் கதாபாத்திரம் அந்த அழைப்பை ஏற்க மறுத்தால்.... ஒன்றுமில்லை. அதன் வாழ்க்கை எந்த மாற்றங்களுமின்றி அப்படியாகத்தான் இருக்கும்.

சமீபத்தில் இரண்டு அழைப்புகள் எனக்கு வந்தன. இரண்டின் அழைப்பையும் ஏற்றேன். ஒரு அழைப்பு என்னை பிரம்மாண்ட உலகுக்குள் அழைத்துக்கொண்டு போய் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மற்றொரு அழைப்பு நான் எதிர்பாராத பல திருப்பங்களையும், சுவாரஸ்யங்களையும் கொண்டதாக உள்ளது. என் கால்கள் ஓட்டத்திற்கு தயாராகிவிட்டன. என் உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது நண்பர்களே!

Comments

Popular Posts