திரை - 7

மிழ் சினிமாவில் பெரிய ஆளுமைகள் பலரும் பெரிய பின்புலத்தில் இருந்து வந்தவர்களில்லை. தங்களது சுயதேடல், அர்ப்பணிப்பு, ஈடுபாடு, உழைப்பு, திறமை இவற்றின் துணைகொண்டு தங்களை செதுக்கிக் கொண்டதனாலேயே அவர்கள் பிரபலங்களானார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளுள் எம்.என்.ஞானசேகரனும் குறிப்பிடத்தகுந்தவர். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றான "அவள் அப்படித்தான்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர். புதிய தலைமுறைக்கு ஒரு உந்துசக்தியாக இருந்து வருபவர். திரைத்துறையில் முன்னேற துடிக்கும் பல இளைஞர்களுக்கு இவரின் வாழ்க்கை ஒரு பாடமாக அமைந்தால் அது மிகையில்லை. ""ஒரு விஷயத்தை விஞ்ஞான பூர்வமாக அணுக வேண்டும் என்பதை என்னுடைய ஆசிரியர் ஞானசேகரன் ஸôரிடம்தான் கற்றுக் கொண்டேன்'' என்று தன்னுடைய ஆசிரியர் குறித்து தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ்மேனன் குறிப்பிட்டிருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய ஒளிப்பதிவாளரும், ஆசிரியருமான எம்.என்.ஞானசேகரன் அவர்களை ஒரு மாலைப் பொழுதில் மைன்ட் ஸ்கிரீன் நிறுவனத்தில் சந்தித்து, உரையாடினோம். எங்களது உரையாடல் முடியும்போது ஏறக்குறைய இருட்டத் தொடங்கி, நள்ளிரவை தொட்டிருந்தது. தன்னுடைய இரு சக்கர வாகனத்திலேயே நம்மை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு சென்றவரிடம் இன்னும் சற்று உரையாடியிருக்கலாம் என்று எழுந்த ஆவலை அடக்க முடியவில்லை.
நினைவலைகள்: 8
இரண்டாமாண்டில் படித்துக் கொண்டிக்கும்போது திரைப்படக் கல்லூரியில் தமிழ்நாடு திரைப்பட பிரிவு ஒரு அங்கமாக இருந்தது. இதனை தனித்தனியாக பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்துப் பிரிவு மாணவர்களும் ஒருங்கிணைந்து வகுப்புகளைப் புறக்கணித்து, ஸ்டிரைக்கில் ஈடுபட்டோம். இதற்கு அப்போது மாணவப் பொதுச் செயலாளராக இருந்த ருத்ரைய்யாவும், ராஜேந்திரனும் (தற்போது மலேசியாவில் இருக்கிறார்) தலைமேயேற்று நடத்தினார்கள். எங்களது ஸ்டிரைக் வெற்றிப் பெற்று, திரைப்படக் கல்லூரியும், தமிழ்நாடு திரைப்பட பிரிவும் தனித்தனியானது. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது என்னுடைய முதல்வர் சிவதாணு பிள்ளை வகுப்பு எடுப்பதில் பெரும்பாலும் ஆர்வம் காட்டமாட்டார். கல்லூரியின் வளர்ச்சிப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார். என்னைப் பொருத்தவரை, கல்லூரியின் வளர்ச்சியையும் கவனித்துக்கொண்டு, வகுப்பும் எடுத்தால்தான் அவர் சிறந்த முதல்வர் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பதை தற்போது ஒரு கல்லூரியின் தலைவராக ( ஈங்ஹய்) இருப்பதால் உணருகிறேன். அவருடைய தொலைநோக்குப் பார்வை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. திரைப்படக் கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது யாரை சென்று சந்திப்பது? யாரிடம் உதவியாளராக இருப்பது? போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த சமயத்தில் கல்லூரியில் திரைப்பட இயக்கம் பிரிவுக்கு துறைத் தலைவராக இருந்த ஏ.எஸ்.ஏ.சாமி ஸôரைச் சென்று சந்தித்தேன். அவர், ஒளிப்பதிவாளர் மஸ்தானிடம் உதவியாளராக சேருவதற்கு சிபாரிசு கடிதம் ஒன்றை எனக்கு எழுதிக் கொடுத்தார். ஏ.எஸ்.ஏ.சாமி ஸôருக்கு கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே என் மேல் பிரியம் உண்டு. மஸ்தான் ஸôரை நேரில் சென்று சந்தித்தேன். அவர் ""தொடர்ந்து என்னோடு தொடர்பில் இரு'' என்று கூறினார். பிறகு இரண்டு, மூன்று முறை அவரை சந்திக்க முயற்சித்தும் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. அவர் வெளிப்புற படப்பிடிப்பிற்கு சென்றிருந்தார். வீட்டிற்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதால், டெல்லிக்கு ரயிலேறினேன். நண்பர்களின் உதவியால் எனக்கு டெல்லி-தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. அங்கு ஒளிப்பதிவு இரண்டு பிரிவுகளில் நடந்து கொண்டிருந்தது. ஒன்றில் ஃபிலிம் வகைக் கேமராவிலும், மற்றொரு பிரிவு எலெக்ட்ரானிக் வகை கேமராவிலும் நிகழ்ச்சிகள் படம் பிடிக்கப்பட்டு வந்தன. இதில் நான் எலெக்ட்ரானிக் பிரிவில் பணியாற்றினேன். அப்போது இந்தியாவில் விரல் விட்டு எண்ணுமளவிற்கே தொலைக்காட்சி நிலையங்கள் இருந்தன. நிகழ்ச்சிகள் கூட மாலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு பத்து மணிக்குள் முடிவடைந்து விடும். டெல்லியிலிருந்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் பட்டதால் டெல்லியில் நிலவும் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகள் முடிவடையும் நேரத்தில் மாறுபாடுகள் இருக்கும். நான் ஒளிப்பதிவு பிரிவில் வேலைப் பார்த்தாலும், மற்ற பிரிவுகளிலும் உள்ள தொழில்நுட்பங்களிலும் ஆர்வம் காட்டுவேன். அப்படியாக பல பிரிவுகளைப் பற்றி நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது எனக்குத் தெரிந்த விஷயம் எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கியதுதான் இண்ய்ங்ம்ஹற்ர்ஞ்ழ்ஹல்ட்ஹ் என்பது விளங்க ஆரம்பித்தது! இது என்னை வியப்பிலும் ஆழ்த்தியது. தொடர்ந்து பல தொழில்நுட்பங்களை நான் கற்றுக்கொண்டிருப்பதற்குக் காரணம் நான் என்னை மாணவனாக நினைத்துக் கொண்டிருப்பதுதான். டெல்லி தொலைக்காட்சியில் நான் ஐம்ஹஞ்ங் ர்ழ்ற்ட்ண்ஸ்ரீர்ய் ற்ங்ப்ங்ஸ்ண்ள்ண்ர்ய் ஸ்ரீஹம்ங்ழ்ஹவில்தான் நிகழ்ச்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தேன். இந்த கேமரா நம் வீட்டில் இருக்கும் 27இன்ச் டி.வி.யைவிட பெரியது. இந்த கேமராவைத் தூக்க இரண்டு ஆட்கள் தேவைப்படுவார்கள். அதுமட்டுமின்றி இந்த கேமராவின் கேபிளைத் தூக்குவதற்கென்றே ஒரு ஆளை நியமித்திருந்தார்கள். அவருக்கு ஈர்ப்ப்ஹ்ம்ஹய் என்று பெயர். இந்த கேமராவை இந்திய தொலைக்காட்சிக்காக ஜெர்மனி பரிசாக வழங்கியிருந்தது. டெல்லியில் என்னுடன் வேலைப் பார்த்த பெரும்பாலானோர் தமிழர்களாக இருந்தனர். அதற்குக் காரணம், திரைப்படக்கல்லூரி சென்னையிலும் அமைந்திருந்ததுதான். டெல்லி தொலைக்காட்சி நிலையத்தில் 1975லிருந்து 1978வரை மூன்றாண்டுகள் மட்டுமே பணியாற்றினேன். இடையில் ஒரு ஆறு மாதங்கள் பூனே திரைப்படக் கல்லூரியில் ற்ங்ப்ங்ஸ்ண்ள்ண்ர்ய் ல்ழ்ர்க்ன்ஸ்ரீற்ண்ர்ய் பயிற்சியின்போது சஹற்ண்ர்ய்ஹப் க்ங்ச்ங்ய்ஸ்ரீங் ஹஸ்ரீஹக்ங்ம்ஹ் பற்றிய டாகுமெண்டரி ஃபிலிமை எடுத்தேன். அப்போது இந்திய வானொலி நிலையத்தின் ஒரு பிரிவாகத்தான் டெல்லி தொலைக்காட்சி நிலையம் இருந்தது. வானொலி நிலையத்தில் இருப்பவர்கள் இங்கும், இங்கிருப்பவர்கள் அங்கும் என மாறி, மாறி வேலைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்களை இன்ஜினியரிங் ஊழியர்கள் என்றும், புரோகிராம் ஊழியர்கள் என்றும் இரு பிரிவுகளாக பிரித்து வைத்திருந்தனர். நான் புரோகிராம் பிரிவில் இருந்தேன். நான் பயன்படுத்திய கேமரா பெரும்பாலும் உட்புற படப்பிடிப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். அப்போதெல்லாம் டெல்லி தொலைக்காட்சியில் வாரத்தின் கடைசி நாளில் மாநில மொழிப் படங்களை ஒளிபரப்புவார்கள். படத்தை ஒளிபரப்புவதற்கு முன்னதாக, படம் குறித்து ஹிந்தியில் விமர்சனம் செய்வார்கள். இந்த விமர்சனத்தை செய்பவர்கள் பெரும்பாலும் ஹிந்தி மொழி தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். மாநில மொழி வாரிப் படங்களின் வரிசையில் தமிழ் படம் வரும்போது, நம் படங்கள் குறித்து சுருக்கமாக தெரிந்துகொள்ள, தமிழ் தெரிந்த ஆட்களிடம் கேட்டு குறிப்பெடுத்துக் கொள்வார்கள். அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டு ஹிந்தியில் பேசும்போது நமக்கே சிரிப்பு வந்துவிடும். தவறுதலான உச்சரிப்பில் அவர்கள் மிகவும் சங்கடப்பட்டு, ""உங்க பாஷை டப்பாவில் போட்டு குலுக்கிய சில்லறை மாதிரி இருக்கு'' என்று கருத்து சொல்வதும் உண்டு! டெல்லி தொலைக்காட்சியில் பணியாற்றியபோது இந்தியாவின் பெரிய ஆளுமைகளான இந்திரகாந்தி, மொரார்ஜி தேசாய், நீலம் சஞ்சீவ் ரெட்டி, பாபு ஜெகஜீவன் ராம், செüத்ரி சரண்சிங், வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பல பிரபலங்களையும், உலக நாடுகளின் தலைவர்களையும் படம் பிடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களுக்கும், வெவ்வேறு மொழி பேசும் மக்களோடும் சேர்ந்து பணியாற்றவும், மாறுபட்ட பல இடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பும் நான் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதால் கிடைத்தது. அப்படி மறக்க முடியாத எத்தனையோ சம்பவங்கள் என் மனதில் இருக்கின்றன. அதில் ஒரு சம்பவம் இப்போதும் என் மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. டெல்லி பிளையிங் கிளப் ஒன்றிக்காக விமானங்களை படம் பிடிக்க சென்றிருந்தேன். கேப்டன் வாசன் அவர்களின் துணையோடு கிளைடர் விமானம் ஒன்றை எடுத்துக்கொண்டு வானில் பறந்து கொண்டிருந்தோம். அப்போது வாசன், ""என்ன லூப்பிங் அடிக்கலாமா?'' என்று விமானத்தை சற்றென்று டைவ் அடித்தார். இதை சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. நான் வைத்திருந்த கேமரா, எனது தொடையில் விழுந்து, மிக வலுவாக அழுத்திக் கொண்டிருந்தது. நான் பார்த்தபோது எனது காலுக்கு கிழே வானமும், என் தலைக்கு மேலே விமான நிலையமும் இருந்தது. இதைப் பார்த்த ஆச்சர்யத்தில் நான் படம் பிடிக்கும் எண்ணத்தையே மறந்து விட்டேன். பிறகு சகஜநிலைக்கு வந்து, நான் படம் பிடிக்காததை கேப்டன் வாசனிடம் கூறவே அவர், ""அதனாலென்ன?'' என்றபடியே இரண்டாவது டைவ் அடிக்கும்போதுதான் மிக கவனமாக படம் பிடித்தேன். தொலைக்காட்சியில், ஒளிப்பதிவாளர்களாகிய நாங்கள் பெரும்பாலும் இப்ர்ள்ங்-ன்ல் ள்ட்ர்ற் காட்சிகளாகத்தான் படம் பிடிப்போம். அதற்குக் காரணம், ப்ர்ய்ஞ் ள்ட்ர்ற்ல் படம் பிடித்தால் உருவங்கள் சிறிய அளவில் இருப்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால்தான். ஆகவே, தொடர்ந்து இப்ர்ள்ங்-ன்ல் காட்சிகளில் ஒரு விஷயத்தை சொல்ல நான் தேர்ச்சிப் பெற்றதால்தான் "அவள் அப்படித்தான்' திரைப்படத்தில் என்னால் துணிச்சலாக இப்ர்ள்ங்-ன்ல் காட்சிகளை திறம்பட வைக்க முடிந்தது. பொதுவாகவே தொலைக்காட்சியை இப்ர்ள்ங்-ன்ல் ம்ங்க்ண்ன்ம் என்று சொல்லுவார்கள். இந்த துறையைப் பொருத்தவரை தொழில்நுட்பத்தைத் தாண்டி கிரியேட்டராக இருந்தால் மட்டுமே தொடர்ந்து நிற்க முடியும். இந்த சமயத்தில் டெல்லியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து, நான், சமீபத்தில் ஓய்வு பெற்ற என்.டி.டி.வியின் இட்ண்ங்ச் ங்க்ண்ற்ர்ழ் தியாகராஜன், தற்போது சென்னை திரைப்படக் கல்லூரியில் தொலைக்காட்சிப் பிரிவு துறைத் தலைவராக வேலைப்பார்க்கும் ஸ்ரீதர், நாடு, நாடாகப் போய் விளையாட்டைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் சிவப்பிரகாசம் போன்றோர் ஒன்றாக இருந்தோம். அப்போதெல்லாம் சென்னையிலிருந்து வரும் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும், பல்வேறு மாநிலங்களின் தொலைக்காட்சியில் வேலைப் பார்க்கும் (குறிப்பாக ஜலந்தர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லக்னோ உள்ளிட்ட நகரங்களிலிருந்து வருபவர்கள்) எங்களது நண்பர்களுக்கும் எங்களது வீடுதான் "வேடந்தாங்கலாக' இருந்தது. இந்த இடத்தில் முக்கியமான ஓர் விஷயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். தொலைக்காட்சி நிலையத்தைவிட்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு, நான் வந்து விட்டாலும் தொடர்ந்து அங்கே வேலைப் பார்த்த நண்பர் தியாகராஜன்தான் நமது திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு பெற்றுத் தர காரணமாயிருந்தார். எவ்வித எதிர்பார்ப்புமின்றி பலரது வாழ்க்கையில் விளக்கு ஏற்றிவைத்த பெருமை அவரையைச் சாரும். இன்று இந்தியா முழுவதும் உள்ள தொலைக்காட்சி நிலையங்களில் சென்னை - தரமணி திரைப்படக் கல்லூரி மாணவர்களே அதிகம் பங்கு பெற்றிருக்கின்றனர். இந்த பெருமையெல்லாம் தமிழகத்தில் திரைப்படக் கல்லூரி ஆரம்பிக்கப்பட வேண்டும் என நினைத்து அதனை நிகழ்த்திக் காட்டிய பெரும் தலைவர் காமராஜரையேச் சாரும் என்றால் அது மிகையில்லை! பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய "அம்மா வந்தாள்' நாவலை அடிப்படையாக வைத்து திரைப்படம் இயக்கும் முயற்சியில் இருந்தார் ருத்ரைய்யா. ஆகவே, டெல்லியில் இருக்கும் தி.ஜானகிராமனை சந்தித்து, நாவலைப் படமாக்குவதற்குண்டான உரிமையை வாங்குவதற்கு எழுத்தாளர் வண்ணநிலவனை அனுப்பியிருந்தார். வண்ணநிலவன் என்னிடம் டெல்லியிலிருக்கும் ஜானகிராமனின் முகவரியைக் காட்டினார். அது எங்களுடைய அலுவலக கட்டிடத்தின் வேறு ஒரு பிரிவின் முகவரியாக இருந்தது. எங்களது அலுவலக கட்டிடத்தில் வேறு ஒரு அறையில் தி.ஜானகிராமன் வேலை பார்த்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியாமல் போயிருக்கிறது. எங்கள் அலுவலகத்தின் வெளியே இருந்த யுனைடெட் நியூஸ் ஆப் இண்டியா கேண்டீனில்தான் பெரும்பாலானோர் சாப்பிடுவார்கள். தென்னிந்திய உணவு வகைகள் அங்கு கிடைக்கும் என்பதால் நானும் அங்குதான் சாப்பிடுவேன். வண்ணநிலவனும், நானும் தி.ஜானகிராமனைச் சந்தித்தபோது எனக்கு ஆச்சர்யம்! காரணம், அவரைப் பலமுறை இந்த யு.என்.ஐ. கேண்டீனில் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்தான் ஜானகிராமன் என்பது எனக்குத் தெரியாமல் போயிருக்கிறது. பிறகு, வண்ணநிலவன் அவரிடம் உரிமையை வாங்கிக்கொண்டு சென்னைக்கு கிளம்பினார். டெல்லியில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் எனது கவனம் முழுக்க கோடம்பாக்கத்திலேயே கவனம் கொண்டிருந்தது. சென்னையிலிருந்து தொடர்ந்து ருத்ரைய்யாவும், நானும் கடிதம் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ அடிக்கடி பேசிக்கொள்வோம். என் மனதின் ஒரு பக்கம் திரைப்பட ஒளிப்பதிவிற்கான வேட்கை கனன்று கொண்டேயிருந்தது. அந்த வேட்கையை நிறைவேற்றுவதற்கான தருணமும் வந்தது.
(தொடரும்)

Comments

Popular Posts