கதை எழுது - 22
1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது.
அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று.
கடைசியாக 'டெக்னிக்'. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான்
உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் 'டெக்னிக்'
என்பது தானாக வந்துவிடும்.
2. இலக்கியம் இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம்
எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது இலக்கியம். நல்ல உணர்வு
பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது நச்சு இலக்கியம்.
3. ஒரு கதாநாயகனிடம் வாசகர்கள் அனுதாபம் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அந்தக்
கதாநாயகனிடம் தங்களது நல்ல குணங்களையும், பலவீனங்களையும் காணவேண்டும்.
4. ஒரு கருத்து எழுத்தாளனின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அவன் என்னென்ன முயற்சி
செய்தாலும் உள்ளத்தை விட்டு வெளியேற மறுத்து, உள்ளுக்குள்ளேயே இடையறாது
குடைந்து குடைந்து உறுத்திக் கொண்டிருந்தால்தான் - அந்தக் கருத்தை எவ்வளவு
சிறந்த முறையில் வெளியிட முடியுமோ அவ்வளவு சிறந்த முறையில் வெலியிட்டாலன்றி
அந்த உறுத்தலினின்றும் விடுபடமுடியாது என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் - ஒரு
எழுத்தாளன் அதனை எழுதத்துணிய வேண்டும் என்பது என் நம்பிக்கை.

Comments
Post a Comment