கதை எழுது - 3

1. எந்த நேரத்தில் எழுதுவீர்கள்?
குறிப்பிட்ட நேரம் ஒன்றுமில்லை. இரவோ பகலோ எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம். பெரும்பாலும் விடியற்காலையில் எழுதுவதுண்டு. மத்தியான நேரத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதும் எழுதிக்கொண்டிருப்பதுண்டு. மத்தியானத்துக்குப் பின் எழுதுவதில்லை. இரவில் கொஞ்ச நேரம் எழுதுவது பின் படிப்பதுதான் வேலை.
2. எப்படி எழுதுவீர்கள்?
தொடங்கும்போது முன்பு எழுதியவைகளை ரசித்துப் படிப்பேன். அப்போது கற்பனை வளரச் சூழ்நிலை
யைத் தயாராக்குவேன். சில சிறிய திருத்தங்களைச் செய்வேன். அப்போது நிறுத்தியதிலிருந்து தொடர்ந்து வேறொன்று கிடைக்கும். கொஞ்சம் அதிகம் எழுதினால் படிக்க முடியாதல்லவா? எப்படியும் நான்கு பக்கமாவது படிப்பதுண்டு. எழுதிக்கொண்டிருக்கும் போது எங்கேயாவது கற்பனை நின்று விடுவதுண்டு. சில நேரங்களில் வாக்கிய அமைப்புக்காக நிறுத்தப்படும். அது கிடைத்து விட்டால் மறுபடியும் தொடருவேன்.
3. எழுத்தைப் பற்றிய நியமம், குறிக்கோள் ஏதேனும் உண்டா?
உதிரியான காகிதங்களில் எழுதுவது எனக்குப் பிரியமில்லை. முழுநீளமுள்ள புத்தகங்களில் எழுதுவதுதான் பழக்கம்.
4. ஒரு நாளைக்கு எத்தனை பக்கங்கள் எழுதுவீர்கள்?
நல்ல சூழ்நிலையில் மூன்று பக்கங்கள் எழுதுவேன். மோசமன நாட்களில் கால் அல்லது அரைப் பக்கம் தான் எழுதுவேன். ஒன்றும் எழுத முடியாத நாளும் உண்டு.
5. எழுதும் போது தனிமை தேவையா?
எழுதும் போது தனிமை தேவைதான். நன்றாக எழுதும் தினத்தில் அசதியும் உண்டாகும். என்னுடைய சக்தி எங்கேயோ குறைந்து போனதுபோன்று தென்படும் அப்போது தனிமையே பயங்கரமாகத் தோன்றும். நான்
என் மகளைச் சத்தமிட்டு அழைப்பேன். அவளுடைய குரல் கேட்டால் மீண்டும் நிம்மதி அடைவேன். அதனால் நான் தனிமையில் இல்லை என்பது நிச்சயமாகுமல்லவா?
6. எழுதுவது சுலபமா?
பொறுக்க முடியாத வேதனையைத் தருவதாகும்.

Comments

Popular Posts