திரை - 2

""மது சர்வீஸ் இன்ஜினியர்கள் மிகவும் திறமையானவர்கள். அதற்கு பல சம்பவங்களைச் சொல்லலாம். நாங்கள் தொடர்ந்து டப்பிங்கில் இரவு, பகலாக வேலை செய்வதால், சவுண்டு இன்ஜினியரிங் இயந்திரங்கள் பற்றிய தியரியெல்லாம் கொஞ்சம் மறந்து விட்டது. ஆகவே, ஏதேனும் பிரச்சினையென்றால் நாங்கள் வெளியிலிருந்து சர்வீஸ் இன்ஜினியரைத்தான் அழைப்போம். பெரும்பாலும், டப்பிங்கின்போது எலெக்ட்ரானிக் ப்ராப்ளம்தான் ஏற்படும். அந்த சமயங்களில் படத் தயாரிப்பாளார்கள் எங்களை நெருக்குவார்கள். ""சீக்கிரம் முடித்துக்கொடுங்கள். திரையிட தேதி நெருங்கிவிட்டது'' என்பார்கள். பாலாஜி ஸôருக்கோ, வேலை தாமதமாகுவது பிடிக்கவே பிடிக்காது. குறித்த நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். வெளிநாட்டில் இதே போன்று டப்பிங் மிஷினில் ஏதேனும் பிரச்சினையென்றால் சம்பந்தப்பட்ட பொருளை மற்றும் மாற்றி ரீ-பிளேஸ் பண்ணுவார்கள். நமது இன்ஜினியர்களோ சம்பந்தப்பட்ட பொருளை சரிசெய்து, அதனையே திருப்பி, இயந்திரத்தில் பொருத்துவார்கள். ஆகவே, நேர விரயத்தை நாம் தவிர்க்க முடியாது. ஆனாலும், எவ்வளவு வேகமாக டப்பிங் வேலைகளை முடிக்க முடியுமோ, அவ்வளவு வேகமாக முடித்து கொடுத்து விடுவோம். அதனால்தான் சொன்னேன். நமது சர்வீஸ் இன்ஜினியர்கள் திறமைசாலிகள் என்று! பாலாஜி ஸôர் டப்பிங் தியேட்டரில் முதலில் டப்பிங் மிக்ஸ் செய்த படம் "வாழ்வே மாயம்'. முதலில் டப்பிங் செய்திருந்த ஸ்ரீப்ரியாவின் குரலை, இரண்டு நாட்களுக்குப் பிறகு திருப்பிக் கேட்கும்போது, அதில் நாய்ஸ்ஸிங் அதிகமாக இருந்தது. பாலாஜி ஸôர் இந்த பிரச்சினைக் குறித்து எங்களிடம் விவாதித்துவிட்டு, ""ஸ்ரீப்ரியா மேடத்தை திரும்பவும் அழைத்து டப்பிங் பேச வைக்கலாம்'' என்று சொன்னார். ஆனால், ஸ்ரீப்ரியாவோ அப்போது பெங்களூரில் படப்பிடிப்பில் இருந்தார். அன்று இரவே அவரை விமானத்தில் வரவழைத்து, இரவு பதினோரு மணியிலிருந்து அதிகாலை ஏழு மணி வரை அவருடைய வசனப் பகுதிகளை டப்பிங் செய்தோம். ஸ்ரீப்ரியாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அதேப்போல், "விதி' திரைப்படத்தின் டப்பிங்கும் எங்களுடைய தியேட்டரில்தான் பதிவு செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கு வசனங்களை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். அதேப்போல கங்கை அமரன் ஸôர் இயக்கத்தில் வந்த "கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் டப்பிங்கும் இங்குதான் நடைப்பெற்றது. இந்தப் படத்தில் புகழ்பெற்ற "வாழைப்பழ காமெடி' காட்சியில் பேசப்படும் வசனங்களை டப்பிங் செய்யும்போது நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். காரணம், நூற்றிற்கும்மேல் அந்த வசனங்களை திருப்பி, திருப்பி டப்பிங் செய்ததும், அதில் பலரை டப்பிங் பேச வைக்க வேண்டியிருந்ததும்தான். இன்னும் சொல்லப்போனால் அது எங்களுக்கு எரிச்சலாகவும் இருந்தது. ஆனால், படம் வெளிவந்த பிறகு, ரசிகர்களிடம் அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த பிறகு பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடி விட்டது. இயக்குனர் "பில்லா' கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில், கங்கை அமரன் இசையில் உருவான "வாழ்வே மாயம்' திரைப்படத்திற்கு டப்பிங் செய்தோம். அப்போது எங்களிடம் ஃபோர் டிராக் டப்பிங் மிஷின் இருந்தது. இந்தப் படத்தின் டப்பிங்கை முடித்து பார்க்கும்போது, அதில் பின்னணி இசை அதிகமாகி, வசனங்களில் ஒலி குறைந்திருந்தது. அதுவும் இல்லாமல், பட விநியோகஸ்தர்களுக்கு இந்த பிரிண்டை போட்டுக் காட்டியிருக்கிறார்கள். படத்தை பார்த்த அவர்கள், இந்த ஒலி மாறுபாட்டு பிரச்சினையால் படத்தை வாங்க மறுத்து விட்டார்கள். இதையறிந்த பாலாஜி ஸôர், என்னை அழைத்து, பிரசாத்தில் இருந்த ராமநாதன் ஸôரிடம் கொண்டு சென்று இந்த பிரச்சினையை சரி செய்ய சொன்னார். பிரசாத்தில் அப்போது த்ரீ டிராக் மிஷின் மட்டும்தான் இருந்தது. நாங்கள் ஃபோர் டிராக் மிஷினில் டப்பிங் செய்திருந்தோம். இப்போது, த்ரீ டிராக் மிஷினில் சரி செய்யும் போது ஒரு டிராக்கில் உள்ள ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்களை கேட்க முடியாது. என்ன செய்யலாம்? என்ற யோசனையில் இருந்தேன். ராமநாதன் ஸôரோ, அந்த ஒரு டிராக்கிற்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்யும் ஒரு நபரை அழைத்து வந்து, அந்த ஒரு டிராக்கை பதிவு செய்து, பிரச்சினையையும் சரி செய்து மூன்றே நாட்களில் முடித்துக் கொடுத்தார். பாலாஜி ஸôர் "வாழ்வே மாயம்' படத்தைப் பிறகு, சொந்தமாக ரிலீஸ் செய்தார். படம் சூப்பர் ஹிட்டானது. விநியோகஸ்தர்களிடம் விற்றிருந்தால் கிடைக்கும் லாபத்தை விட அதிகமான லாபம் இந்தப் படத்தின் மூலமாக பாலாஜி ஸôருக்குக் கிடைத்தது. பொதுவாக பாலாஜி ஸôருக்கு தேவையில்லாமல் பணியாளர்கள் விடுப்பில் இருப்பது பிடிக்காது. ""ஜனவரி ஒன்று, ஜனவரி 26, தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டாலே போதுமானது. மீதி நேரங்களை வீணடிக்காமல் வேலையில் கவனம் செலுத்துங்கள்'' என்று சொல்லுவார். காரணம், எங்களது தியேட்டரில் இரவு, பகல் பாராது தொடர்ந்து டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருந்ததுதான்! இந்தக் கம்பெனியில் என்னோட பல படங்களில் வேலைப்பார்த்தவர் லட்சுமி நாராயணன். பெரும்பாலான படங்களில் மூர்த்தி - லட்சுமி நாராயணன் என்று இருவரின் பெயரையும் சேர்த்துத்தான் டைட்டிலில் பெயர் போடுவார்கள். ஏறக்குறைய இருவரும் சேர்ந்து 300 படங்கள் ஒன்றாக வேலைப் பார்த்தோம். இதில் "காதலன்' திரைப்படத்திற்கு எங்கள் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது. இயக்குனர் மணிரத்னத்தின் "ரோஜா' திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் இங்குதான் நடந்தது. அதுமட்டுமின்றி, பல பிரபல இயக்குனர்களின் படங்களும் எங்களது டப்பிங் தியேட்டரில்தான் டப்பிங் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று! 2003-ம் வாக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, எங்களது சுஜாதா இன்டர்நேஷனல் கம்பெனியின் டப்பிங் பிரிவை டி.டி.எஸ். தியேட்டராக மாற்றலாம் என்று நினைத்தார். அது சரியாக கைவரப் பெறாததால் அந்த எண்ணத்தை கைவிட்டார் பாலாஜி ஸôர். அடுத்த சில வருடங்களில் படிப்படியாக டப்பிங் தியேட்டரும் மூடப்பட்டது. இந்த சமயத்தில் நான் ஒரு ஆறு மாதங்கள் அமெரிக்கா - சின்சிநாட்டியில் உள்ள என்னுடைய மகளான கிருத்திகா ராஜேஷுடன் வீட்டில் ஒரு ஆறு மாதங்கள் தங்கியிருந்து, அமெரிக்காவைச் சுற்றிப் பார்த்தேன். பிறகு சென்னை வந்தபோது, பிரசாத் ஃபிலிம் அகாடமியில் உள்ள அருண் போல் ஸôர் (சவுண்டு), அகாடமி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவும், கற்பிக்கவும் என்னை அழைத்தார். அவரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து மீண்டும் பணியாற்ற வந்தேன். இன்றைய சூழலில் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆவலோடு வரும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் பிறகு, படிப்படியாக குறைந்து விடுகிறது. இது ஏன்? என்று புரியவில்லை! அவர்கள் வாழ்க்கையின் ஏனைய விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவது காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதேப்போல, அவர்களுக்கு பட்ஜெட்டிற்குள் படம் எடுக்கவும் முடியவில்லை. இத்தகைய சிறு சிறு பிரச்சினைகள் மாணவர்களிடத்தில் இருந்தாலும், அவர்களுடைய படைப்பு மட்டும் மாறுபட்டு, பல தளங்களில் பயணிப்பதை நாம் உணரத்தான் வேண்டும். தங்களுக்கென்று சில குறிப்பிட்ட ரோல் மாடல்களை வைத்துக்கொண்டு அவர்கள் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். என் பயணமும் அவர்களோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது'' என்றார்.
...........................................................................................................
அது ஒரு பரபரப்பான மாலை நேரம். பிரசாத் ஃபிலிம் லேப்பில் நாம் அவருடைய வருகைக்காக காத்திருக்கிறோம். அவர், இந்தியாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப புரட்சியை தம் நிறுவனத்துடன் கைக்கோர்த்துக்கொண்டு சப்தமில்லாமல் நிகழ்த்திக் காட்டியவர். விடாமல் துரத்தும் ஃபோன் கால்கள், பேச காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் என பிஸியான சூழலுக்கு இடையிலும் நமக்காக இரண்டரை மணி நேரம் ஒதுக்கித் தந்தார் சிவராமன். பிரசாத் ஃபிலிம் லேப்பில் ஃபிலிம் பிராஸஸிங்கில் பொது மேலாளாராக பதவி வகிப்பவர். ஏறக்குறைய, ஆப்ஹஸ்ரீந் & ரட்ண்ற்ங், நன்க்ஷற்ழ்ஹஸ்ரீற்ண்ஸ்ங் ள்ஹ்ள்ற்ங்ம், அக்க்ண்ற்ண்ஸ்ங் ள்ஹ்ள்ற்ங்ம், ஈண்ஞ்ண்ற்ஹப் ள்ஹ்ள்ற்ங்ம் என நான்கு ஃபிலிம் பிராஸஸிங் மாற்றங்களை தன் பயணத்தில் கண்டவர். எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் படம் பதனிடும் பிரிவில் ( ஊண்ப்ம் ல்ழ்ர்ஸ்ரீங்ள்ள்ண்ய்ஞ் க்ங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற் ) பயின்ற சீனியர் மாணவர். மற்றும் கல்லூரியின் மாணவ பேரவைத் தலைவராகவும் அப்போது பொறுப்பு வகித்தவர். அவருடைய வாழ்க்கையிலிருந்து சில பதிவுகள் இங்கே... ""1967லிருந்து 1969 வரையிலான காலகட்டத்தில் படம் பதனிடும் ( ஊண்ப்ம் ல்ழ்ர்ஸ்ரீங்ள்ள்ண்ய்ஞ்) பிரிவில் மாணவனாக மூன்று வருடம் பயின்றேன். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தபோது உடனே வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான் இந்தியாவில் ஃபிலிம் பிராஸஸிங் லேப்கள் இருந்தன. சிறிது காலம் வேலைக்காக சிரமப்பட்டேன். பிறகு 1970-ல் மும்பையில் உள்ள "பேமஸ் சினி லேப்'பில் ஃபிலிம் பிராஸஸிங் பிரிவில் சூப்பர்வைஸராக வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது கருப்பு - வெள்ளை ஃபிலிம் பிராஸஸிங் பிரிவில் இரண்டு வருடங்களும், பிறகு கலர் பிராஸஸிங் பிரிவில் மூன்று வருடங்களுமாக சுமார் ஐந்து வருடங்கள் அங்கே வேலைப் பார்த்தேன். பிறகு புனே திரைப்படக்கல்லூரியில் இரண்டு வருடங்கள் ஃபிலிம் பிராஸஸிங் பிரிவிற்கு லேப் மேனஜராகவும், ஒளிப்பதிவு மாணவர்களுக்கு ஆசிரியராகவும் இருந்தேன். அதன் பிறகு 1977-ல் பிரசாத்தில் பதனிடும் துறையில் ( ஊண்ப்ம் ல்ழ்ர்ஸ்ரீங்ள்ள்ண்ய்ஞ்) சூப்பர்வைஸராக வேலைக்குச் சேர்ந்து, பிறகு ஸ்ரீட்ண்ங்ச் ள்ன்ல்ங்ழ்ஸ்ண்ள்ர்ழ் ராக பதவி உயர்வுப்பெற்று அதிலிருந்து ஸ்ரீட்ண்ங்ச் ற்ங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய், ற்ங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப் ம்ஹய்ஹஞ்ங்ழ், ஞ்ங்ய்ங்ழ்ஹப் ம்ஹய்ஹஞ்ங்ழ் ராக பதிவு உயர்வு பெற்று தற்போது பணியாற்றி வருகிறேன். பிரசாத் ஃபிலிம் லேப்பிற்கு நான் வந்தபோது, கருப்பு - வெள்ளை மற்றும் கலர் இரண்டு வகையான ஃபிலிம் பிராஸஸிங்கை தமிழ் சினிமாவில் செய்து கொண்டிருந்தார்கள். பிரசாத்தில் நான் பணிபுரியும்போது தமிழ் சினிமா முழுக்க முழுக்க கலருக்கு மாறியது. அது மட்டுமின்றி புதுப்புது தொழில்நுட்பங்களும் அதன் பின்னால் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கின. இந்தியாவிலேயே முதன்முறையாக பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய பெருமை பிரசாத் நிறுவனத்தையே சாரும். அதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக ஹக்க்ண்ற்ண்ஸ்ங் ள்ஹ்ள்ற்ங்ம் ர்ச் ல்ழ்ண்ய்ற்ண்ய்ஞ் , 70ம்ம் ல்ழ்ண்ய்ற்ண்ய்ஞ் ற்ங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ், ஸ்ரீண்ய்ம்ஹள்ஸ்ரீர்ல்ங் ஜ்ண்ற்ட் 4 ற்ழ்ஹஸ்ரீந் ள்ற்ழ்ங்ர் ள்ஹ்ள்ற்ங்ம், ல்ர்ப்ஹ்ள்ற்ங்ழ் க்ஷஹள்ங் ச்ண்ப்ம் ல்ழ்ர்ஸ்ரீங்ள்ள்ண்ய்ஞ் போன்ற தொழில்நுட்பங்களைச் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் மிக முக்கியமானது ல்ர்ப்ஹ்ள்ற்ங்ழ் க்ஷஹள்ங் ச்ண்ப்ம் ல்ழ்ர்ஸ்ரீங்ள்ள்ண்ய்ஞ் தொழில்நுட்பம். இதை ஆசியாவிலேயே முதன்முறையாக திரைத்துறையில் பிரசாத் ஃபிலிம் லேப்தான் அறிமுகப்படுத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னால் இபஅ ல்ப்ஹள்ற்ண்ஸ்ரீ ச்ண்ப்ம் த்தான் தமிழ் சினிமாவில் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த வகை ஃபிலிம்களை நாம் கையாலேயே கிழிக்க முடியும். ஆனால், ல்ர்ப்ஹ்ள்ற்ங்ழ் க்ஷஹள்ங் ச்ண்ப்ம்யை கிழிக்க முடியாது. வளையும், மடியுமே தவிர கிழிக்க முடியாது. இதன் வருகையினால் ஒளிப்பதிவாளர்களின் தரம் உயர்ந்தது. அதேப்போல, ஆயிரம் முறை புரொஜெக்டரில் ஓட்டினாலும் இந்த ஃபிலிம் பாதிப்படையாது. இதனைத் தொடர்ந்து ஈர்ப்க்ஷஹ் க்ண்ஞ்ண்ற்ஹப் ழ்ங்ப்ங்ஹள்ங் ல்ழ்ண்ய்ற்ண்ய்ஞ், ஈற்ள், 3ஈ ச்ண்ப்ம் போன்ற தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தினோம். இதில் "மை டியர் குட்டிச்சாத்தான்' திரைப்படம் முதல் 3ஈ ச்ண்ப்ம்ஆக, பிரசாத் ஃபிலிம் லேப்பில் உருவாகி வெளியானது. இந்தியாவின் முதல்முறையாக இந்த தொழில்நுட்பத்தையும் பிரசாத் அறிமுகப்படுத்தி, திரைத்துறையின் வளர்ச்சிக்கு தன் பங்கை ஆற்றியது. பிரசாத்தில் கலர் ஃபிலிம் பிராஸஸிங்கின் மூலமாக வெளிவந்தது தெலுங்கில் எடுக்கப்பட்ட "பக்த கண்ணப்பா'வாகும். தமிழில் முதன் முறையாக, சுஜாதா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பான "தீபம்' திரைப்படமாகும். அதன்பிறகு இரண்டாவது படமாக "சங்கரா பரணம்' வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. "16 வயதினிலே' திரைப்படத்தின் கிரேடிங் வேலைகளை எனது சக மாணவரான ஒளிப்பதிவாளர் நிவாஸ் உடன் இணைந்து பணியாற்றினேன். அதுப்போல ஹிந்தியில் பாப்புலரான "ஷோலே' படத்தின் இயக்குனரான ரமேஷ் சிப்பியின் அடுத்தப் படமான "சாகர்' படத்திற்கும் கிரேடிங் செய்தேன். இதில் கமல்ஹாசன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அன்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதேப்போல "சிவப்பு ரோஜாக்கள்', "புதிய வார்ப்புகள்' போன்ற எண்ணற்ற படங்களுக்கு கிரேடிங் செய்திருக்கிறேன். பிரசாத் ஃபிலிம் லேப்பில் தங்களது தொழில்நுட்ப வேலைகளை செய்து, தங்களை வெற்றிப்பட இயக்குனர்களாக மாற்றிக்கொண்டவர்களின் பட்டியல் நீளமானது. அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் இந்திய சினிமாவின் பிதாமகனான இயக்குனர் சத்யஜித்ரே, நம்பிக்கையளிக்கும் இயக்குனர்களான மிருணாள்சென், அபர்ணாசென், கெüதம் கோஷ், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள். தமிழில், இயக்குனர்களான பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர், சேரன், பாலா போன்றவர்களும், ஒளிப்பதிவாளர்களில் அசோக் குமார், நிவாஸ், பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், ரவி.கே.சந்திரன், தங்கர்பச்சான், ரத்னவேலு, கே.வி.ஆனந்த், திரு போன்றவர்களின் வளர்ச்சியில் எங்ளுடைய சிறு பங்கும் இருக்கிறது. இந்த பட்டியல் இன்னும் நீளமானது. குறிப்பிட்ட சிலரை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளேன். இன்று தமிழ் சினிமாவில் உருவாகும் அனைத்துப் படங்களிலும் ஏதேனும் ஒரு வகையான வேலை, எங்கள் நிறுவனத்தின் மூலமாக செய்யப்பட்டே வெளியாகிறது என்பது எங்களது நிறுவனத்திற்கு மட்டுமே கிடைத்திருக்கும் தனித்த அடையாளமாகும். 1982 ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஃபிலிம்கள் அனைத்தும் எங்களது நிறுவனத்தில்தான் பிராஸஸிங் செய்யப்பட்டது. டெல்லியில் விளையாட்டு நிகழ்ச்சி படம் பிடிக்கப்பட்டு, சென்னையில் பிராஸஸிங் செய்யப்பட்டு பிறகு எடிட்டிங் வேலைகள் மும்பையில் முடிக்கப்பட்டு, மறுபடியும் சென்னையில் அவ்விளையாட்டு நிகழ்வுகள் செய்தி சுருளாக மூன்று தினங்களுக்குள் வெளியிடப்பட்டது. இதற்காக எங்களது நிறுவன ஊழியர்கள் இரவு, பகல் பாராது வேலை செய்தனர். திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதுகள், சம்பந்தபட்ட ஃபிலிம் பிராஸஸிங் நிறுவனத்திற்கும் பிரித்து வழங்கப்பட்டது. விருதுபெறும் ஒளிப்பதிவாளர் எந்த நிறுவனத்தில் ஃபிலிம் பிராஸஸிங் வேலைகள் செய்தாரோ, அந்த நிறுவனத்திற்கும் விருது வழங்கப்படும். அந்த வகையில் முதல் தேசிய விருதை 1991-ம் ஆண்டு "மிஸ் பேட்டி சில்ரன்' என்ற ஆங்கிலப் படத்திற்கும், "சைலன்ட் வாலி' என்னும் ஆங்கில மொழி ஆவணப்படத்திற்குமாக இரண்டு விருதுகளை ஜனாதிபதி வெங்கட்ராமன் கையால் நிறுவனத்தின் சார்பாக நான் பெற்றுக்கொண்டேன். தொடர்ந்து பிரசாத் நிறுவனத்தில் பல புதுமைகளையும், தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தவர் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான "ரமேஷ் பிரசாத்' அவர்கள். அவர் கொடுத்த சுதந்திரமும், ஊக்கமும், தன்னம்பிக்கையினால்தான் நாங்கள் இவ்வளவு சாதனைகளை நிறைவேற்ற முடிந்தது. இதுவரை 18 முறை தேசிய விருதை எங்கள் நிறுவனம் பெற்றிருக்கிறது என்பது எங்களது நீண்ட கால சாதனைகளில் ஒன்றாகும். இந்த சாதனைகளுக்குப் பின்னால் எங்களது நிறுவன தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டு உழைப்பும், அர்ப்பணிப்பும் அடங்கியிருக்கிறது. அவர்களின்றி இச்சாதனையை நாங்கள் எட்டியிருக்க முடியாது. திரைப்படக் கல்லூரியில் பயிலும்போது "ஷூ ஷைன் பாய்' என்னும் பெயர் கொண்ட படத்தைத்தான் இறுதி வருட படமாக எடுத்தோம். இதற்கு இயக்கத்தையும், ஒளிப்பதிவையும் என்னுடைய சக மாணவரான ஜெயச்சந்திர பிரசாத் கவனிக்க, நான் ஃபிலிம் பிராஸஸிங் செய்தேன். இது ஒரு யதார்த்த வகைப் படமாகும். தினசரி ஷூக்களை சுத்தும் செய்யும் சிறுவனின் வாழ்க்கை எப்படி உயர்ந்த நிலையை அடைகிறது என்பதை மையமாக வைத்து படத்தை எடுத்திருந்தோம். பள்ளி மாணவனாக இருந்தபோது, நான் பார்த்து வியந்த பல இயக்குனர்களை, ஒளிப்பதிவாளர்களை பிறகு, நான் பிரசாத்திற்கு பணிபுரிய வந்தபோது பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி மறக்க முடியாத பெரிய பெரிய சினிமா ஜாம்பவான்களோடு பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது இனி யாருக்கும் கிடைக்காத அரிய பொக்கிஷம். இதில் என்றைக்குமே எனக்கு தன்னிறைவு உண்டு. வாழ்க்கையில் மறக்க முடியாத எத்தனையோ நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், என் நினைவில் இருப்பது சில சம்பவங்கள் மட்டுமே. அதில் முக்கியமானது "16 வயதினிலே' படத்திற்கு கிரேடிங் செய்த அனுபவம்தான். இந்தப் படத்திற்கு கிரேடிங் செய்தபோது, நான் பார்த்த தமிழ் சினிமாக்களிலே வேறு ஒரு புதிய தளத்தில், இப்படத்தின் தன்மை அமைந்திருந்ததை நான் கண்டேன். அப்போது இந்தப் படம் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைக்கும் என்று நினைத்தேன். நான் நினைத்ததுப் போலவே, அப்படம் வெளியாகி தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி விட்டது. இதைப் போலவே, இந்திய சினிமாவின் தந்தை சத்யஜித்ரேவோடு பழகிய நாட்களைச் சொல்லலாம். சோமுன்டு ராய் ஒளிப்பதிவில், ரேயின் இயக்கத்தில் வெளிவந்த " ஏண்ழ்ஹந் ழ்ஹத்ஹழ் க்ங்ள்ட்ங்' என்னும் படத்திற்கு கலர் கிரேடிங் செய்ததன் மூலமாக அவருடைய நட்பு எனக்குக் கிடைத்தது. இதை என் வாழ்க்கையில் கிடைத்த பெரிய சந்தர்பமாக இன்று வரை உணர்ந்து வருகிறேன். சத்யஜித்ரே ரொம்பவும் எளிமையான மனிதர். பேச்சும், செயலும், நடத்தையும் என அவரது எளிமை அவருடன் பழகும் எல்லோருக்குமே பிடிக்கும். அப்படியான ஒரு உயரமான மனிதரை, உயர்ந்த உள்ளத்தை பிறகு நான் என் வாழ்நாளில் சந்திக்கவேயில்லை...'' என்று உற்சாகம் கொப்பளிக்க பேசுகிறார் சிவராமன். தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நிறுவனத்தின் பொது மேலாளர் என்பதை மறந்து, ஒரு மாணவனாக அவருடைய குதூகலமான பேச்சு எங்களையும் தொற்றிக்கொண்டு மனதை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. உற்சாகம் கொப்பளிக்க அவருடைய கைகளைப் பற்றி குலுக்கிவிட்டு வெளியே வந்தோம். ஏறக்குறைய வெளியே இருட்டத் தொடங்கியிருந்தது.

Comments

Popular Posts