திரை - 8
தமிழ் சினிமாவை சர்வதேச உயரத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை பல இயக்குநர்களுக்கு உண்டு. அதில் குறிப்பிடத் தகுந்தவர் ருத்ரைய்யா. "அவள் அப்படித்தான்' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி அமைத்து, புதிய திரைமொழியை எழுதியவர். பல்வேறு தளங்களில் அதிர்வலையை ஏற்படுத்திய இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். இன்று பெரிய நட்சத்திரங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கும் ரஜினி, கமல் போன்றோர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர். நம் சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது? என்பதை தோலுரித்துக் காட்டியிருந்தது இப்படம். இதுவரை கட்டமைக்கப்பட்டிருந்த பெண்கள் மீதான பிம்பத்தை உடைத்தெறிந்தார் இயக்குநரான ருத்ரைய்யா. இப்படம் திரைக்கதை உத்தி, பாத்திர வடிவமைப்பு, கதையின் உள்ளடக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என யாவும் இதுவரை தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருந்த இலக்கணங்களையெல்லாம் உடைத்தெறிந்தது. அதுமட்டுமின்றி பல புதிய அரிய முயற்சிகளையும், பரிசோதனைகளையும் இப்படத்தின் மூலமாக முயற்சித்துப் பார்த்து, மிகப்பெரிய அளவில் ஒரு சிறந்த இயக்குநராக வெற்றிக் கண்டார் ருத்ரைய்யா. இத்தகைய சிறப்பு மிக்க திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு பிரிவில் மிகவும் பக்கபலமாக இருந்தவர்களில் ஒளிப்பதிவாளர்களான நல்லுசாமியும், எம்.என்.ஞானசேகரனும் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவார்கள். "அவள் அப்படித்தான்' திரைப்படத்தின் ஒளிப்பதிவு குறித்து ஒரு தனித்த ஆய்வுக் கட்டுரை எழுதுமளவிற்கு ஏராளமான தொழில்நுட்ப விஷயங்களும், அணுகுமுறைகளும் அதில் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக படத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் ஸ்ரீப்ர்ள்ங்-ன்ல் ள்ட்ர்ற்ள்கள் கவனிக்கத்தக்கவை. பொதுவாக ஒரு கதாபாத்திரத்தின் மிகையுணர்ச்சியை வெளிப்படுத்த பெரும்பாலும் இவ்வகையான பிம்பத்தையே பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதற்கு ஒரு இயக்குநருக்கு அசாத்திய திறமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். காரணம், சம்பந்தப்பட்ட பாத்திரம் கதையின் சூழலுக்கேற்றவாறும், கதையின் தன்மைக்கேற்றவாறும் கதாபாத்திரம் பிரதிபலிப்பை தன் முகத்தில் நுணுக்கமாக காட்டத் தவறி விட்டால், அக்காட்சியின் அழுத்தமானது பார்வையாளனுக்கு கிடைக்காமல் போய்விடும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால்தான் பெரும்பாலான இயக்குநர்கள் அண்மைக்காட்சியைத் தவிர்த்து விடுவார்கள் (சமீபத்தில் கவனம் பெற்றிருக்கும் இயக்குநர் மிஷ்கின் தனது திரைப்படங்களில் ஸ்ரீப்ர்ள்ங்-ன்ல் ள்ட்ர்ற்களைப் பயன்படுத்த தவறுவதை கவனிக்கவும்). இந்த தத்துவத்தை சரியாகப் புரிந்துகொண்டு தனது படங்களில் வெளிப்படுத்தி வெற்றிக் கண்டவர்களில் முக்கியமானவர்கள் பாரதிராஜா, பாலசந்தர், மகேந்திரன், ருத்ரைய்யா போன்றவர்கள். அவ்வகையில் ருத்ரைய்யா அதிகம் அண்மைக் காட்சியைப் தனது கதையின் முழுக்கப் பயன்படுத்தியிருப்பார். இந்த காட்சிகளை உயிரோட்டமாக படம் பிடித்ததில் ஒளிப்பதிவாளர் எம்.என்.ஞானசேகரனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அவர் அண்மைக்காட்சிகளை மிக நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டிருக்கும் விதத்தை "அவள் அப்படித்தான்' திரைப்படத்தில் நாம் காண நேரிடலாம். அதுமட்டுமின்றி படத்தில் ஆவணப் படத்திற்கான காட்சிக்கூறுகளை அதனுடைய தத்துவத்திற்கேற்றவாறு படம் பிடித்திருப்பார் ஞானசேகரன். அன்றைய குறைந்த தொழில்நுட்பத்தில் இதுபோன்ற முயற்சிகளை ஒளிப்பதிவில் எடுப்பதற்கு வெறும் தொழில்நுட்பம் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. அசாத்தியமான துணிச்சலும், புதிய கோணத்தில் முயற்சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அந்த வகையில் ஞானசேகரன், சினிமாவில் குறைவான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தாலும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த ஒளிப்பதிவாளர்களின் பட்டியலில் நிரந்தர இடத்தைப் பிடிக்கிறார்!
""திரைப்பட வேலைகள் தொடங்கப்பட போவதாக ருத்ரைய்யாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் சென்னைக்கு கிளம்பி வந்தேன். முதலில் எடுக்கப்படவிருந்த திரைப்படம் பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய, புகழ்பெற்ற "அம்மா வந்தாள்' நாவலைத்தான். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்தது. பிறகு, ஏனோ அந்தப் படம் தொடங்கப்படவேயில்லை. அதன்பின் உருவான கதைதான் "அவள் அப்படித்தான்'. இப்படத்தில் வரும் பாத்திரங்களில் சில எங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர்களின் பிரதிபலிப்பே. படம் உயிரோட்டத்துடன் காணப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும். இந்தப் படத்தில் பாபு ராமசுவாமி (இவர் முன்னாள் தமிழ்நாடு திரைப்பட தணிக்கைக் குழு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது) உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அனந்து ஸôர் கொடுத்த தைரியத்தாலும், ஊக்கத்தாலும்தான் ருத்ரைய்யா தயாரிப்பாளராகவும் மாறினார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை நாங்கள் திரைப்படம் இயக்க முன் அனுபவம் பெற்றிருக்கவில்லை. நானும், நல்லுசாமியும் எந்த ஒளிப்பதிவாளரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை. அதேப்போல ருத்ரைய்யாவும் யாரிடத்திலும் உதவி இயக்குநராக வேலைப் பார்த்ததில்லை. ஆனால், நாங்கள் படம் எடுக்க முன் வந்தோம். எங்கள் முயற்சிக்கு எல்லோருமே ஊக்கமளித்தார்கள். குறிப்பாக எங்களை நம்பி படத்தில் நடிக்க முன்வந்த கமல்ஹாசன் ஸôருக்குத்தான் நாங்கள் நன்றி சொல்லியாக வேண்டும். அவர் நடித்ததால்தான் மற்ற நட்சத்திரங்களும் துணிச்சலாக நடிக்க முன் வந்தார்கள். அவர்கள் நடிக்க முன் வந்ததற்கு கமல் ஸôரின் ஒத்துழைப்பும் ஒரு காரணம். இன்று நினைத்துப் பார்க்கும்போது அது எனக்கு மலைப்பாகத் தெரிகிறது. பின்னே, எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் புதிதாக திரைப்படக்கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, எந்தவித திரைப்பட அனுபவமும் இல்லாமல் படம் இயக்க வந்த இளைஞர்களை நம்பி யாராவது பெரிய நட்சத்திரங்கள் இன்று நடிக்க முன் வருவார்களா? அன்று கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீப்ரியா, சரிதா போன்ற பிரபல நட்சத்திரங்கள் முன் வந்தார்கள். புதியவர்களோடு வேலைப் பார்க்க அவர்களுக்கு விருப்பமும், புதிய விஷயத்தைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென்கிற ஆவலும் கமல் ஸôரைப் போல, மற்ற கலைஞர்களுக்கும் இருந்தது. அதனால்தான் "அவள் அப்படித்தான்' போன்ற அரிய திரைப்படத்தை நாங்கள் எடுப்பதற்கு சாத்தியமானது.
இத்திரைப்படத்திற்கு நாங்கள் ஒளிப்பதிவு செய்யும்போது இப்போதுள்ளது போல நிறைய ஃபிலிம் வகைகள் இருந்ததில்லை. கருப்பு&வெள்ளை வகை ஃபிலிமில் இரண்டும், கலரில் ஒன்று மட்டுமே இருந்தது. நாங்கள் ஞழ்ஜ்ர் ஆப்ஹஸ்ரீந் & ரட்ண்ற்ங் 100 அநஅ, 400 அநஅ வகை ஃபிலிமைத்தான் பயன்படுத்தினோம். அதேப்போல அப்போது அழ்ழ்ண் 2இ ம்ர்க்ங்ப் வகை கேமராவைக் கொண்டுதான் முழுப்படத்தையும் படம் பிடித்தோம். ஏறக்குறைய 27,000 அடியில் படத்தை முடித்து விட்டோம். முக்கியமாக வெளிப்புற படப்பிடிப்பு சாதனங்களுக்கு ஆன செலவானது ரூபாய் 20,000ற்கும் குறைவானதாகும். "அவள் அப்படித்தான்' படத்தில் கமல்ஹாசன் ஒரு ஆவணப்பட இயக்குநராக நடித்திருப்பார். அவர் பெண்களின் எண்ணங்கள் குறித்து வெளியிடங்களில் பேட்டி காணும் காட்சிகள் யாவும் நடிப்பில்லை. நிஜமாக எடுக்கப்பட்ட காட்சிகளாகும். முன் திட்டமிடல் எதுவுமின்றி திடீரென்று காரை விட்டு இறங்கி பேருந்தில் இருக்கும் பெண்களிடம் கமல்ஹாசன் கேள்விகள் கேட்பார். அதேப் போல சேரிப்புற பகுதிகள், பெண்கள் கிருத்துவ கல்லூரி போன்ற இடங்களில் கமல் பேட்டி எடுக்கும் காட்சிகள் யாவும் யதார்த்தமாக எடுக்கப்பட்ட காட்சிகளே. இந்தக் காட்சிகளை படம் பிடிக்கும்போது ஒளிப்பதிவிற்கு அவசியமான ஞகங்ய்ள்ங், இஹம்ங்ழ்ஹ ஸ்ண்ங்ஜ் ல்ர்ண்ய்ற், இர்ம்ல்ர்ள்ண்ற்ண்ர்ய், அல்ங்ழ்ஹற்ன்ழ்ங் போன்றவற்றை வேகமாக தீர்மானித்துக் கொண்டு படம் பிடித்தோம். காரணம், நாங்கள் இதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் நேரம் அதிகமாகி, இதனால் ரசிகர் கூட்டம் கூடி, பிறகு படம் பிடிப்பது சிரமமாகிவிடும் என்பதால், வேகமாக படம் பிடித்தோம். அதுமாதிரி ஸ்ரீப்ர்ள்ங்-ன்ல் ள்ட்ர்ற் களை அதிகம் படம் பிடித்ததற்கும் நான் டெல்லி தொலைக்காட்சி நிலையத்தில் வேலைப் பார்த்ததுதான் பக்க பலமாக இருந்தது. அதிகம் இந்தக் காட்சிகளில் கண்ஸ்ங் ழ்ங்ஸ்ரீர்ழ்க்ண்ய்ஞ் யைப் எடுத்து, அதைப் அப்படியே பயன்படுத்தியிருந்தோம். இது படத்திற்கு பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. படத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கும் நறுக்கு தெரித்தாற் போன்ற வசனங்களுக்குச் சொந்தக்காரர்கள் அனந்து ஸôரும், வண்ணநிலவனும்தான்! ரஜினி - ஸ்ரீப்ரியா பேசும் வசனங்கள் யாவும் அனந்துவின் கைவண்ணத்திலும், கவித்துவமான வசனங்கள் எல்லாம் வண்ணநிலவனின் எழுத்தில் உருவானவையே. மேலும் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டு ஒரே ஷெட்யூலில் நாங்கள் முடிக்கவில்லை. எப்போதெல்லாம் நடிகர்களின் கால்ஷீட் ப்ரீயாக இருக்கிறதோ அப்போதெல்லாம் படப்பிடிப்பை வைத்துக்கொள்வோம். படப்பிடிப்பிற்காக நாங்கள் தயார் நிலையிலேயே இருப்போம். எல்லோரும் பெரும்பாலும் ருத்ரைய்யாவோடு இருந்ததால் உடனடியாக படப்பிடிப்பிற்குத் தயாராகவும் எங்களால் முடிந்தது. சமீபத்தில் தனது திரைக்கதை பயிற்சி வகுப்பில் கமல்ஹாசன் இப்படத்தை மய் ஸ்ரீர்ய்ஸ்ங்ய்ற்ண்ர்ய்ஹப் ஜ்ஹஹ் ர்ச் ச்ண்ப்ம் ம்ஹந்ண்ய்ஞ் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் இறுதிக் காட்சியில் கமலும், ஸ்ரீப்ரியாவும் உரையாடும் காட்சியை எடுக்கும்போது நடந்த படப்பிடிப்புச் சம்பவமானது மறக்க முடியாதது. அந்த குறிப்பிட்ட ஒரு காட்சியை எடுப்பதற்காக அண்ணாநகரில் ஒரு வீட்டைப் பார்த்திருந்தோம். வீட்டின் கீழ்ப்பகுதியில்தான் படம் பிடிப்பததாக ஏற்பாடு. ஆனால், யதேச்சையாக ருத்ரைய்யா அந்த வீட்டின் மாடிப்படிக்குச் செல்ல, அங்கே தனியாக ஒரு வீடு இருந்ததைப் பார்த்தவர், வீட்டைச் சுற்றிப் பார்க்கவும், கதையில் வரும் முக்கிய காட்சிக்கான சரியான இடமாக அது இருக்கவே, அங்கே படப்படிப்பை நடத்தலாம் என்று திட்டமிட்டார். இந்த வீட்டில் படம் பிடிப்பதற்காக கீழ் வீட்டில் இருந்தவர்களிடம் பேசியபோது, அவர்கள் அனுமதி கொடுத்துவிட்டார்கள். இந்த வீட்டில் ஒரு பெண் தனியாக வசித்து வருகிறார் என்பது அங்கு போன பின்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. கதைப்படியும் ஸ்ரீப்ரியா, யாருடைய துணையின்றியும் தனியாகத்தான் வசிப்பார். இரண்டும் சரியாக இருக்கவே அந்த இடத்திலேயே படப்பிடிப்பை நடத்தினோம். அந்த காட்சியில் கமலிடம் சண்டை போடும்போது ஸ்ரீப்ரியா தூக்கியெறியும் பொருட்கள், கலைந்து கிடக்கும் துணிமணிகள் யாவும் அந்த வீட்டுப் பெண்மணியுடையதே. அவர் வீட்டை விட்டு வெளியே எங்கோ போயிருந்தார். ஆகவே, அந்த இடத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். சரியாக, படப்பிடிப்பு முடியவும், அவர் வீட்டிற்குள்ளே வரவும் சரியாக இருந்தது. அந்த பெண்மணிக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே... அடேயப்பா! எங்களால் சமாளிக்கவே முடியவில்லை. எல்லோரும் பயந்தே போய்விட்டோம். பிறகு, ஒரு வழியாக அந்த பெண்மணி எங்களை மன்னித்து விட்டு விட்டார். (அந்தக் காட்சியை ஞானசேகரன் எதிரேயிருந்த கணினித் திரையில் நமக்குப் போட்டுக்காட்டினார். அந்த வீட்டின் மிகக் குறுகலான கழிவறையில் கமலுக்கும், ஸ்ரீப்ரியாவுக்கும் இடையே நடக்கும் தள்ளு, முள்ளும் அதனைத் தொடர்ந்த காட்சிகளும் மிக யதார்த்தமாக ஞானசேகரன் தனது தோளிலேயே கேமராவைச் சுமந்து அந்தக் காட்சியைப் படம் பிடித்திருந்த விதம் ரசிக்கும்படியாக இருந்தது). இதுதான் என்னுடைய படப்பிடிப்பு சம்பவங்களில் மறக்கமுடியாதது.
"அவள் அப்படித்தான்' படத்தில் ஒரு காட்சியில் ஸ்ரீப்ரியாவோடு நடித்திருப்பேன். அப்படி படத்தில் நான் நடிக்க வேண்டியிருந்ததற்குக் காரணம், என்னுடைய தவறு ஒன்றினால்தான். வழக்கமாக, அந்தக் காட்சியில் நடிப்பதற்கு திரைப்படக் கல்லூரியில் படித்த நடிப்புப் பிரிவு மாணவர் ஒருவரை நான் ருத்ரைய்யாவிடம் சிபாரிசு செய்திருந்தேன். அவரும் அந்தப் பையனையே நடிக்க வைக்கலாம் என்று அனுமதி அளித்துவிட்டார். அந்த காட்சியில் வருவது எதிர்மறை பாத்திரம் என்பதால் அந்த மாணவர் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டார். படப்பிடிப்பு தொடங்கியதும் எல்லோரும் இப்போ என்ன செய்யப் போகிறாய்? என்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ருத்ரைய்யா வேறுவழியின்றி, ""அந்தக் காட்சியில் நீங்களே நடித்து விடுங்கள்'' என்று சொன்னதோடு, நடிக்கவும் வைத்து விட்டார். நானும் ஒருவழியாக சமாளித்து நடித்து விட்டேன். ஒரு வழியாக படத்தை முடித்து, வெளியிட்டோம். ஆரம்பத்தில் படத்திற்கு மக்களின் வரத்துக் குறைவாகத்தான் இருந்தது. இப்படத்தைப் பார்த்த இயக்குநர்களான பாரதிராஜாவும், மிருணாள்சென்னும் படம் குறித்து சிறப்பாக பத்திரிகைகளில் கூறவே, அதனைப் படித்த கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக படம் பார்க்க தியேட்டருக்கு வந்தனர். பின்னர் மெல்ல மெல்ல படம் குறித்த செய்திகள் மக்களிடம் பரவி அதன்பிறகு படம் சிறப்பாக ஓடியது. இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது ஸ்ரீப்ரியாவிற்கும், சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது எங்களுக்கும், சிறந்த தயாரிப்பிற்கான விருது ருத்ரைய்யாவிற்கும் கிடைத்தது. ஆனால், கமல்ஹாசனுக்கு விருது வழங்கப்படாதது எங்கள் குழுவிற்கு வருத்தத்தை அளித்தது.
(தொடரும்)

Comments
Post a Comment