திரை -15

மிழ் சினிமாவின் வளர்ச்சிப்பாதையில் சென்னை-தரமணியிலுள்ள அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் பங்கு என்பது கனிசமானது. மிகச்சிறந்த திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்களை வழங்கியப் பெருமை இக்கல்லூரியையேச் சாரும். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் உருவாகும் படங்களுக்குப் பின்னால் பணியாற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களில் யாரேனும் ஒருவர் சென்னை திரைப்படக் கல்லூரி மாணவராக இருப்பார் என்னும் அளவிற்கு மிகச்சிறந்த மாணவர்களை இக்கல்லூரி உருவாக்கியிருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்ததிலும் அதன் பங்கு முக்கியமானது. குறிப்பாக, "ஊமை விழிகள்' திரைப்படத்தை அதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். இப்படத்தின் வருகைக்குப் பிறகு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் மீதும், அக்கல்லூரியின் மீதும் பரவலான கவனம் அனைவரின் மத்தியிலும் ஏற்படத் தொடங்கியது. இப்படத்தின் தாக்கத்தால் திரைப்படக் கல்லூரியில் பயின்று பிறகு தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களாக, ஒளிப்பதிவாளர்களாக, படத் தொகுப்பாளர்களாக பலர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து இந்திய சினிமாவிற்கு சிறந்த கலைஞர்களை இக்கல்லூரி மெüனமாக உருவாக்கிய வண்ணம் உள்ளது. இக்கல்லூரி பற்றிய சிறப்புகள் பல உள்ளன. குறிப்பாக, கல்லூரியின் சூழல். சென்னையின் அடையார் மத்திய கைலாஷ் பேருந்து நிலையத்திலிருந்து ராஜீவ்காந்தி சாலையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இக்கல்லூரி. இதன் பரப்பளவு மற்ற கல்லூரிகள் பரப்பளவை விட மிக அதிகமானது. (ஆனால், இன்று அந்த இடத்தில் மிகப்பெரிய ஐ.டி.தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டன) இக்கல்லூரி துவங்கப்பட்டபோது கல்லூரி முதல்வர்களாக பொறுப்பேற்று இருந்தவர்களின் முன் முயற்சியால் இவ்வளவு பெரிய இடம் இக்கல்லூரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம் உருவானதும் இந்த கல்லூரி அமைந்துள்ள இடத்தில்தான். (தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவிற்கு மிகச் சிறந்த படப்பிடிப்புத் தளங்களில் ஒன்றாக விளங்கிய எம்.ஜி.ஆர்.திரைப்பட நகரம் தற்போது இழுத்து மூடப்பட்டுள்ளது) தமிழ் சினிமாவின் பெரும்பாலான சாலையோரக் காட்சிகள் இன்றளவும் இக்கல்லூரியின் வளாகத்திலேயேதான் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று, திரைப்பட நகரம் மூடப்பட்டு விட்டாலும் ஆரம்பிக்கப்பட்டபோது அங்கே நிறையப் படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைப்பெற்று வந்தன. இன்று படம் பிடிப்பு நடந்த பெரும்பாலான இடங்கள் மரங்களால் அடர்ந்து கிடக்கிறது. ஆயினும், மற்ற கல்லூரிகளோடு ஒப்பிடுகையில் இக்கல்லூரியின் பரப்பளவு இன்றும் வியக்ககூடியதே! திரைப்படக் கல்லூரியில் 1981லிருந்து 1984 வரை இயக்கம் பிரிவில் பயின்றவர் எம்.சிவக்குமார். "சினிமா ஒரு பார்வை', "சினிமா ஓர் அற்புத மொழி', "சினிமா கோட்பாடு' போன்ற சினிமா சார்ந்த புத்தகங்களை எழுதியும், மொழி பெயர்த்தும், சினிமா குறித்த புத்தகங்கள் தமிழில் இல்லையே என்ற மனக்குறையைப் போக்கியவர், கேரள அரசுக்காக ஏராளமான அறிவியல் சார்ந்த படங்களை இயக்கியவர், சிறந்த குறும்படங்களும், விளம்பரப் படங்களும் அவருடைய இயக்கத்தில் வெளிவந்திருக்கின்றன. மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் நடத்தும் திரைப்பட பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்டு அதன் உறுப்பினர்களுக்கு சினிமாவின் தொழில்நுட்பம் குறித்தும், இயக்கம் குறித்தும் தொடர்ந்து விவாதித்து வருகிறார். ஒரு அந்திமாலைப் பொழுதில் வளசரவாக்கத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்து, அவருடனான திரைப்படக் கல்லூரி நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டோம். ""சென்னை - சைதாப்பேட்டையிலுள்ள மாந்தோப்பு மேல்நிலைப் பள்ளியில் தான் என்னுடைய பள்ளிப் பருவம் கழிந்தது. பிறகு, நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி.கணிதவியல் பாடத்தை எடுத்துப் படித்தேன். அங்கே படித்துக்கொண்டிருந்தபோது நான் எஸ்.எஃப்.ஐ.யின் சென்னை மாவட்டத் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருந்தேன். இதனால் நிறைய தோழர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தவகையில் தோழர் பாலாஜியோடு மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவர் நிறையப் புத்தகங்களைப் பதிப்பிக்கும் வேலைகளில் இருந்தார். அவருடனான நட்பின் காரணமாக "ஸ்ண்ங்ஜ்ள் ர்ய் ஸ்ரீண்ய்ங்ம்ஹ'என்னும் மிருணாள்சென் எழுதிய புத்தகத்தை "சினிமா ஒரு பார்வை' என்னும் பெயரில் மொழிப்பெயர்ப்பு செய்தேன். இந்தப் புத்தகத்தை மொழிப்பெயர்ப்பு செய்யும்போது எனக்கு பத்தொன்பது வயது இருக்கும். கல்லூரியில் படிக்கும்போது ஆங்கிலத்தின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதனால் ஆங்கிலத்தை மிக வேகமாக கற்றுக்கொண்டேன். இதுதான் என்னுடைய மொழிப்பெயர்ப்பு பணிகளை மிகவும் உதவிகரமாக அமைந்தது. அந்த சமயத்தில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைப்பெற்ற திரையிடல் ஒன்றுக்காக மிருணாள்சென் வந்திருந்தார். சிறந்த இயக்குநரும், எழுத்தாளருமான அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் எனக்கிருந்தது. அந்த திரையிடலுக்கு நானும் சென்றிருந்தேன். அங்கே மிருணாள்சென்னை சந்தித்து, அவருடைய புத்தகத்தை மொழிபெயர்த்தது குறித்துப் பேசினேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டு எனக்கு வாழ்த்து கூறினார். இந்த சந்திப்பு சினிமாவின் மீது எனக்கு ஒரு நெருக்கத்தை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வாரம் ஒரு பிரபல நாளிதழில் திரைத்துறை சம்பந்தமான விளம்பரத்தைப் பார்த்தேன். புனே திரைப்படக் கல்லூரியில் ச்ண்ப்ம் அல்ல்ழ்ங்ஸ்ரீண்ஹற்ண்ர்ய் ஸ்ரீர்ன்ழ்ள்ங்-ல் சேருவதற்கான தகவல்கள் அந்த விளம்பரத்தில் வெளியாகியிருந்தது. அந்தப் பாடப்பிரிவில் சேருவதற்கு இருபத்தைந்து வரிகளில் சினிமா குறித்து எழுதி அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நானும் எழுதியனுப்பினேன். என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்தப் பயிற்சி சுமார் நாற்பது நாட்கள் அங்கே நடைப்பெற்றது. இதற்காக நான் சென்னையிலிருந்து கிளம்பி புனேவிற்கு ஒரு நீண்டப் பயணத்தை மேற்கொண்டேன். நாற்பது நாட்கள் அங்கு நடந்த வகுப்புகளிலும், பயிற்சிகளிலும் பங்கேற்றேன். அப்போது எனக்கு வயது இருபதைத் தொட்டிருந்தது. அந்த நாற்பது நாட்களும் சினிமா குறித்தப் புரிதலை எனக்குள் தோற்றுவித்து, என்னுள் ஒரு பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. இந்த கோர்ûஸ பி.கே.நாயர் மற்றும் சதீஷ் பகதூர் போன்ற ஆசிரியர்கள் நடத்தினார்கள். இந்த ச்ண்ப்ம் அல்ல்ழ்ங்ஸ்ரீண்ஹற்ண்ர்ய் ஸ்ரீர்ன்ழ்ள்ங்-க்கு முதல் ஆசிரியராக இருந்தவர் சதீஷ் பகதூர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாற்பது நாட்களில் முழுவதுமாக சினிமாவை உள்வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், சினிமாவின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்வதற்கு இந்த வாய்ப்பு எனக்கு பேருதவி செய்தது. அதுமட்டுமின்றி கேரளாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இந்தப் பயிற்சியின்போது எனக்கு நண்பரானார். அவர் மும்பையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, அப்பயிற்சி முடிந்தவுடன் அப்படியே மும்பைக்கு சென்று விட்டேன். நண்பரோடு சேர்ந்து மும்பையைச் சுற்றிப் பார்த்தேன். திரைப்படம் சம்பந்தமான புத்தகங்களை வாங்கினேன். சென்னைக்கு திரும்பும்போது என்னுடைய லக்கேஜின் அளவு அதிகரித்துவிட்டது. ஒரு பெரிய மன மாற்றத்துடன் சென்னை வந்திறங்கினேன்.
(தொடரும்)

Comments

Popular Posts