மழலையின் ஞாபகம்

ருள் கவ்வும் சாலையில்
கொலைப் பசியிலும்
அரை நிர்வாணமாய்
என்னையே விலை பேசுகிறேன்
லாரிகளை வழிமறித்தபடி
வண்டிக்காரனிடம்
முலைகளின் எரிச்சலோடு
அழுகிற மழலையின் ஞாபகம்
செவிகளில் அறைய
சேலையை விலக்குகிறேன்
என்னிடமிருந்து
உதட்டின் காயங்களோடு
நிரம்பி வழிகிறது
முகங்தெரியாத மனிதனின்
காமப்பசியில்
எனது பெண்குறி
கசங்கிய தேகத்திற்குள்ளே
என் கற்பு
உயிர்பிரிந்து கிடந்தது
மழலையின் பிரிவை
மனதில் சுமந்தபடி
பின்னிரவில்

Comments

Popular Posts