பூட்டிய அறையில் எரியும் கனவு

னவுகள் தீர்ந்துபோன
ஒரு இரவிலிருந்து
இதை எழுதுகிறேன்
மறுக்கப்பட்ட நினைவுகளின்
உறக்கத்திலிருந்து எழுந்து
பற்றி எரிகிறது
தலையணை
சொற்களின் உக்கிரத்தில்
உடல்
பழுக்கத் தொடங்கி
அறையை நிரப்புகிறது
ஜன்னலுக்கு வெளியிலிருந்து
அறையின் உள்ளிறங்கி
ஒரு காகம்
இதயத்தை கொத்திச் செல்கிறது
வார்த்தைகள் அற்று
அலறி செத்துப் போகிறேன்
விரித்தப்பாயில்
தன்னந்தனியாய்.

Comments

Popular Posts