தரித்திரமாக்கப்பட்ட எம் பிள்ளைகளின் வரலாறு

டீக்கடை பெஞ்சுகளில்
கதை விவாதங்களின்
போதெல்லாம்
பஞ்சடைந்த தலைகளையுடைய
சிறுவன்
மௌனமாய் வைத்துவிட்டு
போகிறான்
டீயையும்
தண்ணீர் குவளையையும்
இரயில் நிலைய சுவர்களின்
ஓரங்களில்
தூக்கியெறியப்பட்ட
ஷூக்களையும்
ஹீல்ஸ் செப்பல்களையும்
கண்காட்சியாய் கடைபரப்பி
தலைகுனிந்தபடி
தைக்கிற சிறுவனிடம்
கால்களை மட்டுமே
நீட்டுகிறோம்
நேசக்கரத்தை முதுகுக்குப் பின்னால்
கட்டிக்கொண்டு
உயிர் குடிக்கும்
தொழிற்சாலைகளில்
மது நாட்டுக்கு
வீட்டுக்கு உயிருக்கு கேடு
மௌனமாய்
படித்தபடியே
இயந்திரவியல் பாடம் மறந்து
தன்னையும் சேர்த்தே
பரிமாறுகிறான்
இயந்திரமாய்
தெருக்களின் முச்சந்திகளில்
பெரிய கோணியில்
ஊரின் வஞ்சகங்களை
சேகரித்தபடி நடக்கிறேன்
ஒற்றைச் செருப்புடன்
மற்றொன்று தேடியபடி
தெருத் தெருவாய்.

Comments

Popular Posts