மரணத்தின் பாஷை

விடை தெரியாத கேள்விகள்
நம் பயணங்கள்
புரியாத பாஷையில்
பேசிக்கொள்கிற
நம் மௌனங்களைப்போல
கணப்பொழுதில் பிரிந்துவிடும் உயிரை
கதைச்சேர்த்து எலும்பைக்கட்டி
விதிகொண்டு
இயற்கை
இடம்பெயர்க்கும் இயந்திரம்தான்
நாம்
நானும் நீயும்
நிலாவைப் பொய்யாக்கி
காதலை மெய்யாக்கி
மரணத்தை மறந்து
வாழ்ந்து விட்டோம்
என் இறப்புவரை
பிரிவைப் பற்றி
ஒருகணமும்
நீ
சிந்தித்திருக்க மாட்டாய்
ஜனனத்தை நீ எந்த அளவு
மகிழ்வோடு
ஏற்றுக்கொள்கிறாயோ
அதுபோல மரணத்தையும்
கொஞ்சம் அழுகைச் சேர்த்து
நிஜமாக்கிக்கொள்
உன்னுடைய அலங்கோல
ஆராவாரமுடைய
அழுகையை கேட்கும்
செவித்திறன் எனக்கில்லை
இருந்தாலும்
உன் ஓரிரண்டு
கண்ணீர்த் துளிகள்
நான் தவறவிட்ட
இரணங்களுக்கு மருந்தாகலாம்
என் புன்னகை
உன் நினைவில்
இருக்கும்வரை.

Comments

Popular Posts