மனக்குரங்கு!

துக்ககரமான காதல்
என் இதயத்தை அடைத்து கொள்கிறது
தொலைபேசியில்
காதலனிடம்
இனிக்க இனிக்க பேசும்
அழகியின் வார்த்தைகள்
நினைவுகளை கிளறி
துக்கத்தின் வாயிலைத்
திறந்து வைக்கின்றன
இறுதியான
பேருந்துப் பயணத்தில்
காதலிக்கப்பட்டவளின்
முகத்தை
மனதில் சுமந்தபடி
துக்கத்தை
அழைத்துக் கொண்டு
இருளுக்குள் செல்கிறேன்
பெருங்குரலெடுத்து
அழத்தொடங்குகிறது
மனக்குரங்கு!

Comments