விசாரணை

ஞ்சள் முலாம்
பூசப்பட்ட
அகன்ட வான்வெளியில்
கையில் புகையும்
சிகரெட்டைப் பிடித்தபடி
நடக்கத் தொடங்குகிறேன்
உருவமில்லா
அழகியொருத்தி
என்மீது சொற்களை
வாரியிறைக்கிறாள்
பலத்த
கைத்தட்டலுக்கிடையில்
மேகங்களோடு
விசாரணை செய்கிறேன்

நிலவு நாண
சூரியன் அதிர
அவளின் மீதுமுள்ள
சொற்களை
அள்ளித் தெளிக்கிறேன்
பூமியெங்கும்
இருட்டிய இரவில்
மழையில் நனைந்தபடி
வீடு திரும்புகிறேன்
இதயத்தை
கழற்றி வைத்துவிட்டு
தெருநாய்
குரைக்கத் தொடங்குகிறது.

Comments